For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குடும்ப ஆட்சி செய்யும் திமுக மீண்டும் வரவேண்டுமா? - எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

நான்கு ஆண்டுக்கு பிறகு தான் மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுபிடித்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
06:55 AM Aug 01, 2025 IST | Web Editor
நான்கு ஆண்டுக்கு பிறகு தான் மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுபிடித்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குடும்ப ஆட்சி செய்யும் திமுக மீண்டும் வரவேண்டுமா    எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,

Advertisement

"காலதாமதத்திற்கு பொறுத்தருள வேண்டும் என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இந்த பகுதியில் விவசாயிகள் அதிகம் இருப்பதால் தான் இந்த விவசாயிக்காக காத்து இருந்தது மகிழ்ச்சி. விளாத்திகுளம் அதிமுக கோட்டை. இயற்கை சீற்றங்களின் போது விவசாயிகளுக்கு ரூ.400 கோடி நிவாரணம் தந்தது அதிமுக அரசு.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர் நிலைகளில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டது அதிமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு அதை நிறுத்திவிட்டது. அது மட்டுமல்ல குடிமராமரத்து பணிகள் செய்யும்போது அதிலிருந்து கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தது அதிமுக அரசு. விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் ஏற்றம் பெற்றது அதிமுக ஆட்சியில் தான்.

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கி விவசாயிகள் பாதிக்கப்பட்ட போது அதிமுக அரசு ரூ.156 கோடி இழப்பீடாக நிவாரணம் வழங்கியது. அதுமட்டுமின்றி மக்காச்சோளத்தை அமெரிக்கன் படைப்புலுக்கள் தாக்காமல் இருக்க ரூபாய் 45 கோடியில் விவசாயிகளுக்கு பூச்சி மருந்து வழங்கியதும் அதிமுக தான்.

விலையில்லா ஆடு, மாடு மக்களுக்கு வழங்கியது அதிமுக அரசு. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் வீடு இல்லாத மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித் தருவோம். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது தமிழகத்தின் அகராதியில் ஏழை இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் இருக்கும், நான் கிராமத்தில் பிறந்தவன் என்பதால் மக்களின் அனைத்து கஷ்டங்களும் எனக்கு தெரியும். உங்களுடன் நான் இருக்கிறேன். ஏழை எளிய மக்கள் பயன்படுவதற்காக அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம் திட்டம் தொடரும்.

திமுக ஆட்சியில் தைப்பொங்கலுக்கு வேஷ்டி சேலை முழுமையாக கொடுக்கவில்லை. கவுண்டமணி செந்தில் காமெடி காட்சி போல ஒன்னு இருந்தா ஒன்னு இருக்காது என்று வழங்கினர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இலவச வேஷ்டி சேலை முழுமையாக வழங்கப்படும். அதுமட்டுமல்ல தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை இலவசமாக வழங்கப்படும்.

தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்பது போல கொரோனா காலத்தில் ரூ.2500 பொங்கல் பரிசாக அதிமுக அரசு கொடுத்தது. அதுமட்டுமின்றி கொரோனா காலத்தில் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் என ஏழு லட்சம் பேருக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் உணவு வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட்டது அதிமுக ஆட்சி தான். உழவன் செயலி ஆஃப் உருவாக்கி பூச்சி தாக்குதலில் இருந்து காக்க அதில் வழிமுறைகள் உள்ளிட்டவை இடம் பெற்று இருந்தன. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கரும்புத் தோட்டத்திற்கு கான்கிரீட் போட்டு செல்கிறார்.

அதிமுக ஆட்சியில் சேலம் அருகே ரூ.1000 கோடியில் 1020 ஏக்கரில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு, கால்நடை மருத்துவ கல்லூரி திறக்கப்பட்டது. ஆனால் அதற்கு ரீப்பன் மட்டும் கட் பண்ணினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இது குறித்து நான் பேசியதும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
நடைபெறுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு அம்மா லேப்டாப் கொடுக்கப்பட்டது. அது திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தொடரும்.

இப்ப பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதிமுக ஆட்சியில் தாமிரபரணி - வைப்பாறு இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்றது. திமுக ஆட்சியில் அது கைவிடப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும் தாமிரபரணி வைப்பாறு இணைப்பு திட்டம்
செயல்படுத்தப்படும்.

உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் வீடு வீடாக இன்றைக்கு மக்களுக்கு 46 பிரச்சனைகள் இருப்பதாகவும். மனு கொடுங்கள் தீர்த்து வைக்கிறோம் என்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது ஊர் ஊராக சென்று ஒரு பெட்டியில் உங்கள் மனுக்களை போடுங்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஏற்கனவே போட்ட மனுவிற்கு பதில் இல்லை. இப்போது தான் மக்களுக்கு பிரச்சனை இருப்பது ஞாபகம் வந்துள்ளது. மக்கள் உஷாராக இருக்க வேண்டும்" என்றார்.

Tags :
Advertisement