For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும்!” - உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வாதம்!!

07:39 PM Nov 03, 2023 IST | Web Editor
“சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும் ”   உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வாதம்
Advertisement

சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும் என ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

Advertisement

அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொது
செயலாளராக அவரது தோழி வி.கே.சசிகலாவும், துணை பொது செயலாளராக
டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்பின்னர் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம்
செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை
உருவாக்கியும் கடந்த 2017ம் ஆண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து சசிகலா
சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு
இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2016ம் ஆண்டு இடைக்கால
பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கான நோட்டீஸ்
அனுப்பியது யார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்??

அதற்கு பதிலளித்த அதிமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாரயண், 2016 மற்றும்
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ஆ தேதி நடந்த பொதுக் குழு கூட்டங்களுக்கு தலைமை
கழகம் மூலம் நோட்டீஸ் அனுப்பியதாக, அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை உயர்
நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளதாக தெரிவித்தார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட எடப்பாடி பழனிசாமி
தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்றும், வேட்பாளருக்கான சின்னத்தை ஒதுக்குவதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திடுவற்கான அதிகாரம் அவருக்கு மட்டுமே
உள்ளதாகவும், தேர்தல் ஆணையமும் இதை தான் அங்கீகரித்துள்ளது எனவும்
தெரிவித்துள்ளார். கட்சியின் வளர்ச்சிக்காக அதிமுகவின் சட்டவிதிகளில் சில மாற்றங்கள்
செய்யப்பட்டதாகவும், பழைய விதிகளை அடிப்படையாக கொண்டு சசிகலா வழக்கு தொடர
முடியாது எனவும், கட்சியின் அடிப்படை அமைப்பு மாற்றப்படவில்லை எனவும் வாதிட்டார்.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி,
கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர்
பதவி நீக்கபட்டு, ஒருங்கிணைப்பாளராக தானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி
பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கபட்ட நிலையே தற்போது வரை தொடர்வதாகவும், இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவை நீக்கியது செல்லும் எனவும் வாதிட்டார்.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால்
ஆஜராகி, கடந்தாண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும்
இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கபட்டுவிட்டதாகவும், தற்போது தன்னை
பொதுச்செயலாளராக தேர்தெடுத்துள்ளதாக தெரிவித்தார். தற்போது அனைத்துமே
மாறிவிட்டதாக தெரிவித்தார்.

வாதங்கள் நிறைவடையாததால், வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நவம்பர் 6ம் தேதிக்கு
தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags :
Advertisement