மதுரையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பணிகளில் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசாணைகள் 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், சென்னைத் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இந்தப் போராட்டத்தை தொடங்கினர்.இதனால் , மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 100க்கும் மேற்ப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு 9 மணியளவில் திடீரென போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து காவல்துறையினர் கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் அனைவரையும் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.