For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கோடீஸ்வரர்களின் ஆட்சியா அல்லது 140 கோடி இந்தியர்களின் ஆட்சியா?” - ராகுல் காந்தி எம்.பி.!

09:06 AM Apr 26, 2024 IST | Web Editor
“கோடீஸ்வரர்களின் ஆட்சியா அல்லது 140 கோடி இந்தியர்களின் ஆட்சியா ”   ராகுல் காந்தி எம் பி
Advertisement

அடுத்த அரசாங்கம் சில பில்லியனர்களின் ஆட்சியா அல்லது 140 கோடி இந்தியர்களின் ஆட்சியா என்பதை உங்கள் வாக்கு தீர்மானிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கடந்த 19-ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 70 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகின.

இன்று அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அதேநேரம் உள்ளூர் சூழலை சார்ந்து வாக்குப்பதிவு முடிவடையும் நேரம் மாறுபடுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகு காந்தி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “என் அன்பான நாட்டு மக்களே! நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகும் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அடுத்த அரசாங்கம் சில பில்லியனர்களின் ஆட்சியா அல்லது 140 கோடி இந்தியர்களின் ஆட்சியா என்பதை உங்கள் வாக்கு தீர்மானிக்கும். எனவே, இன்றே வீடுகளை விட்டு வெளியேறி 'அரசியலமைப்புச் சட்டத்தின் சிப்பாயாக' மாறி ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்”

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement