ஐபிஎல்-லில் போதைப் பொருள் விளம்பரத்துக்கு தடை!
2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 22 முதல் மே 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் , மும்பை இந்தியன்ஸ். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியின்போது போதைப்பொருள்கள் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று பிசிசிஐ-யை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் ஐபிஎல் தலைவர் ஐபிஎல் தலைவர் அருண் துமாலுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஐபிஎல் 2025 முதல் இனி வரும் ஐபிஎல் தொடர்களில் எந்த ஒரு போதைப் பொருளையும் ஊக்குவிக்கும்படியான விளம்பரங்கள் இடம்பெற கூடாது என்றும் கிரிக்கெட் விளையாட்டு என்பது இளைஞர்களை ஊக்குவிக்க பயன்படுகிறது, அதில் போதைப் பொருள் விளம்பரத்தை ஊக்குவிப்பது நல்லது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டியில் போதை பொருட்களின் விளம்பரங்கள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போதைப்பொருள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கேன்சர், கல்லீரல் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. போதைப்பொருள் ஆபத்து தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என ஐபிஎல்-ல் பங்கேற்கும் அணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.