For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருமணம் தாண்டிய உறவு | பெண்ணின் தாயார் வெட்டிப் படுகொலை: 2 பேர் கைது!

01:06 PM Apr 17, 2024 IST | Web Editor
திருமணம் தாண்டிய உறவு   பெண்ணின் தாயார் வெட்டிப் படுகொலை   2 பேர் கைது
Advertisement

திருமணம் தாண்டிய உறவில்,  செலவு செய்த பணத்தை திருப்பி கேட்டு பெண்ணின் தாயாரை வெட்டி கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.  

Advertisement

தென்காசி மாவட்டம்,  செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்
பவித்ரா (24).   இவருக்கும்,  மேலமெஞ்சானபுரம் பகுதியை சேர்ந்த சந்துரு
பிரின்ஸ் என்பவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியுள்ளது.  இவர்களுக்கு
3 வயதில் ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில்,  கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பவித்ரா,  கணவர்
சந்துருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். பவித்ரா,  அவரது தாயார் வீடான விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள ராஜுவ் நகர் பகுதியில் வசித்து வந்தார்.

மிகவும் வறுமையில் வாடி வந்த பவித்ரா தனது குடும்ப செலவிற்காக
குத்துகல்வலசை பகுதியில் உள்ள,  ஒரு டைல்ஸ் விற்பனை செய்யும் கடையில் வேலை
பார்த்து வந்துள்ளார்.  இந்த நிலையில்,  அங்கு வேலை பார்த்து வந்த சக ஊழியரான சுரேஷ் (25) என்பவருக்கும்,  பவித்ராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் சுரேஷ்,  பவித்ராவை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்
அவருக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து,  பவித்ராவை திருமணம் செய்து வைக்கக் கோரி பவித்ராவின் தாயாரான
கோமதியிடம் சுரேஷ் கேட்டுள்ளார்.

அதற்கு பவித்ராவின் தாயர் கோமதி மறுப்பு தெரிவித்திருக்கிறார்.  இதனால் ஆவேசம் அடைந்த சுரேஷ் "இது நாள் வரை உனது மகளுக்கு,  செலவு செய்த ரூ. 2 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் இல்லையென்றால், நடப்பது வேறு" என்று மிரட்டி உள்ளார்.
இதனை பொருட்படுத்தாத கோமதி மற்றும் பவித்ரா,  சுரேஷை ஒருமையில் பேசி
அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக சுரேஷ் கடுமையான மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.   இதனைத் தொடர்ந்து,  சுரேஷ் அவரது சித்தப்பா மகனான மாரிமுத்து என்பவரிடம் நடந்ததை கூறவே,  இருவரும் சேர்ந்து நேற்று பவித்ராவின் வீட்டிற்கு சென்று பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர்.


அப்பொழுது,  வாக்குவாதம் முற்றி சுரேஷ் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அறிவாளை கொண்டு கோமதி மற்றும் பவித்ராவை சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.  இதில் பவித்ரா மற்றும் கோமதி படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.  உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து கோமதியை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கோமதி பரிதாபமாக உயிரிழந்தார்.  இச்சம்பவம் தொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து,  சுரேஷ் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement