For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராஜஸ்தான், ம.பி , சத்தீஸ்கரில் பாஜக - தெலங்கானாவில் காங்கிரஸ் : 12 மணி முன்னிலை நிலவரம்.!

12:24 PM Dec 03, 2023 IST | Web Editor
ராஜஸ்தான்  ம பி   சத்தீஸ்கரில் பாஜக   தெலங்கானாவில் காங்கிரஸ்   12 மணி முன்னிலை நிலவரம்
Advertisement

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நண்பகல் 12 மணி முன்னிலை நிலவரங்களை பார்க்கலாம்.

Advertisement

இந்தியாவின் மிசோரம்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.    இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 4 மாநில தேர்தல்  முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

நடந்து முடிந்த 4 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் :

  • ராஜஸ்தான் 75.45%
  • சத்தீஸ்கர் 67.34%
  • மத்திய பிரதேசம்   71.11%
  • மிசோரம் 78%
  • தெலங்கானா 71.14%

இந்த நிலையில் காலை 8 மணிக்கு நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகளும் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Image
நண்பகல் 12 மணி நேர நிலவரம் :

தெலங்கானாவில் ஆட்சியை இழக்கும் பிஆர்எஸ்.!

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 71 இடங்களிலும் பிஆர்எஸ் கட்சி  38 இடங்களிலும் பாஜக 8 இடங்கள் மற்றும் உவைசியின் AIMIM கட்சி 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக.!

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 73 இடங்களிலும், பாஜக 153 இடங்களிலும் மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதன் மூலம்  மத்திய பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

சத்தீஸ்கரில் ஆட்சியை இழக்கும் காங்கிரஸ்.?

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி  32 இடங்களிலும், பாஜக 52 இடங்களிலும் பிற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ராஜஸ்தான்  மாநிலத்தில் ஆட்சியை இழக்கும் காங்கிரஸ்.?

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக 114 இடங்களிலும் காங்கிரஸ் 71 இடங்களிலும் பிற கட்சிகள் 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதன் மூலம் காங்கிரஸ் வசமிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை பாஜக தட்டிப் பறித்து ராஜஸ்தானில் ஆட்சியமைக்க உள்ளது.

Tags :
Advertisement