For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் - 7 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்த மல்லிகார்ஜுன கார்கே!!

05:28 PM Nov 20, 2023 IST | Web Editor
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல்   7 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்த மல்லிகார்ஜுன கார்கே
Advertisement

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி உள்ளிட்ட 7 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார் மல்லிகார்ஜுன கார்கே.

Advertisement

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இடையே கடுமையான இருமுனைப் போட்டி நிலவி வருகின்றது. தேர்தலை முன்னிட்டு இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டும், தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தும் வருகின்றன. அந்தவகையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (நவ.19) 7 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார்.

ராஜஸ்தானின் அனுப்கார் தொகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கார்கே பேசியதாவது :

“கிருஹ லட்சுமி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் அனைத்து பெண்களுக்கும் ரூ.10,000 வழங்கப்படும், முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். மாட்டு சாணம் கொள்முதல் செய்யப்படும், ரூ.500க்கு சமையல் எரிவாயு வழங்கப்படும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.” என்று அறிவித்தார். மேலும் பேசிய அவர், “இந்தியாவில் மிகப்பெரிய அணைகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை உருவாக்கியது காங்கிரஸ் அரசு. அவை அனைத்தையும் பாஜக சிதைத்து வருகிறது.” என்று கூறினார்.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. 73 தொகுதிகளில் மட்டும் வென்ற பாஜக எதிர்க்கட்சியானது.

Tags :
Advertisement