ராகுல் காந்தி மீண்டும் இன்று தமிழகம் வருகை | தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகளை சந்திக்கிறார்!
கேரள எல்லையில் உள்ள நீலகிரி மாவட்டம் தாளுருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வருகை தரவுள்ளார்.
சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிற்கு வரும் ராகுல் காந்தி, நீலகிரி மாவட்டம் தமிழக கேரளா எல்லை பகுதியான தாளுரில் தனியார் கல்லூரியில் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார்.
பின்பு கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்திப்பது, கல்லூரி மாணவ மாணவிகளை சந்திப்பது, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளையும் சந்திக்கும் ராகுல்காந்தி, 5 நிமிடங்கள் உரையாற்ற உள்ளார். பின்பு 10 கிலோமீட்டர் சாலை மார்க்கமாக வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியில் வாக்கு சேகரிப்பதற்காக செல்கிறார்.
இரண்டு நாட்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருக்கும் ராகுல்காந்தி, பரப்புரையின்போது கூட்டணி கட்சிக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என்று அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி முடிவெடுத்துள்ளது.
கடந்த 3 ஆம் தேதி வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய சென்ற போதும் கட்சிக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என்று அக்கட்சி முடிவெடுத்தது. இதனை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்துள்ளார்.