டெல்லி மாநகரப் பேருந்தில் பயணித்த #Rahul Gandhi ! பயணிகள், ஓட்டுநர்கள், நடத்துனர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்!
டெல்லி மாநகரப் பேருந்தில் பயணம் செய்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பயணிகளிடமும் ஓட்டுநர்கள், நடத்துனர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது சாமானிய மக்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை என்ன? என்பது குறித்து கேட்பதையும் சிலருக்கு நேரடியாக உதவுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இவ்வாறு செருப்பு தைக்குள் தொழிலாளி, லாரி ஓட்டுனர், டேக்ஸி ஓட்டுனர் என பல்வேறு தரப்பினரிடம் கலந்துரையாடி அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்துள்ளார்.
அந்த வகையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, டெல்லி சரோஜினி நகர் பேருந்து பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், மார்ஷல்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார. இது தொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், "நமது ஜனநாயக சமூகத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் ஒவ்வொரு பிரிவினரையும் ராகுல் காந்தி சந்தித்து அவர்களுக்காக குரல் எழுப்பி வருகிறார்" என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
नेता विपक्ष श्री @RahulGandhi ने DTC बस में यात्रा की और ड्राइवर, कंडक्टर व मार्शल से मुलाकात कर उनकी समस्याएं सुनीं।
जननायक हर उस वर्ग से मिलकर उनकी आवाज बुलंद कर रहे हैं, जिनका देश के विकास में महत्वपूर्ण योगदान है।
📍 सरोजिनी नगर बस डिपो, नई दिल्ली pic.twitter.com/ZvjJmarUSP
— Congress (@INCIndia) August 28, 2024