Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

INDIA - கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை நிராகரித்த ராகுல் காந்தி!

06:12 PM Jan 14, 2024 IST | Web Editor
Advertisement

INDIA - கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராகுல் காந்தி நிராகரித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Advertisement

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 28 எதிர்கட்சிகளை கொண்ட INDIA கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். ஆனால் கூட்டணியின் தலைவர், ஒங்கிணைப்பாளர் பதவிகள், தொகுதி பங்கீடு தொடர்பான விஷயங்களில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்த நிலையில் INDIA கூட்டணியின் ஆலோசனை கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. INDIA கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமர் பெயரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பரிந்துரை செய்தார். ஆனால் அவர் அதனை மறுத்துவிட்டார். இதற்கு மாறாக ராகுல் காந்தியை நிதிஷ்குமார் கை காட்டியதாக கூறப்படுகிறது.

ராகுல்காந்திக்கு முக்கிய பொறுப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கருத்து முன்வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ராகுல்காந்தியின் பெயரை நிதிஷ்குமார் பரிந்துரை செய்ததாக தெரிகிறது. ஆனால் இதை ராகுல் காந்தி நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2-வது கட்ட நடை பயணம் இருப்பதால் ஒருங்கிணைப்பாளர் பதவியை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் லல்லு ஒருங்கிணைப்பாளராக வரவேண்டும் என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார். லல்லுவும் அதை ஏற்க மறுத்தபோது ராகுல்காந்தியின் பெயரை நிதிஷ்குமார் மீண்டும் கொண்டு வந்தார்.

அப்போது வேறு சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மம்தா பானர்ஜிக்கு சில ஆட்சேபனைகள் இருப்பதாகவும் விவாதங்கள் தேவைப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆட்சேபனைகள் என்ன என்பதை வெளியிட அந்த வட்டாரங்கள் மறுத்துவிட்டன. இதனால் ஒருங்கிணைப்பாளர் பதவி நியமனம் தொடர்பாக இழுபறி நீடித்தது. இதை தொடர்ந்து INDIA கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கேவின் பெயர் சோனியாகாந்தியால் பரிந்துரைக்கப்பட்டது. இதை பல கட்சிகள் ஆதரித்தன. இதை தொடர்ந்து தான் மல்லிகார்ஜூன கார்கே INDIA கூட்டணி தலைவராக உறுதி செய்யப்பட்டிருக்கிறார்.

Tags :
#INDIA vs NDAALLIANCEArvind KejriwalCongressDelhiDMKIndiaINDIA PartiesKejriwalMallikarjun KhargeMK StalinNDA 4 National Progressnews7 tamilNews7 Tamil UpdatesNitishKumaropposition meetingRahul gandhi
Advertisement
Next Article