Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

’சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ராகுல், காா்கே ஆகியோர் நாட்டை இழிவுபடுத்தியுள்ளனர்’- பாஜக சாடல்!

சுதந்திர தின நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் பங்கேற்காமல் நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடியுள்ளது.
08:31 AM Aug 16, 2025 IST | Web Editor
சுதந்திர தின நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் பங்கேற்காமல் நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடியுள்ளது.
Advertisement

இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திர தின நிகழ்ச்சிகள் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்றது. செங்கோட்டையில் முப்படைகள் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அமைச்சர்கள், உள்ளிட்ட 5000 சிறப்பு விருந்தினர்கள் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சி பங்கேற்றிருந்தனர்.  இந்த சுதந்​திர தின விழா​வில் காங்​கிரஸ் எம்​.பி. ராகுல் காந்​தி, கட்​சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே ஆகியோர் நேற்று பங்​கேற்​க​வில்​லை.

இந்த நிலையில்  டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் பங்கேற்காமல் நாட்டை இழிவுபடுத்தியுள்ளதாக பாஜக சாடியுள்ளது.

இது தொடர்பாக பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் ஷேசாத் பூனாவாலா ”செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்காததன் மூலம், காா்கேயும் ராகுல் காந்தியும் நாட்டையே புறக்கணித்துள்ளனா்; அத்துடன் ராணுவம், அரசியல் சாசனம், சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் தியாகிகளை அவா்கள் இழிவுபடுத்தியுள்ளனா். இதன்மூலம், அவா்களின் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் அல்ல, ‘இஸ்லாமாபாத் தேசிய காங்கிரஸ்’ அல்லது ‘இத்தாலிய தேசிய காங்கிரஸ்’ என்பது நிரூபணமாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
BJPCongressDelhiindependencdaycelebrationIndiaNewsmalligarjunakaPMModiRahulGandhi
Advertisement
Next Article