For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”முதல்வரின் வெளிநாட்டு பயணங்களைப் பற்றி வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள்” - நயினார் நாகேந்திரன்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த நான்காண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு முதலீட்டுப் பயணங்களைப் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளியுள்ளார்.
09:55 PM Sep 02, 2025 IST | Web Editor
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த நான்காண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு முதலீட்டுப் பயணங்களைப் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளியுள்ளார்.
”முதல்வரின் வெளிநாட்டு பயணங்களைப் பற்றி வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள்”   நயினார் நாகேந்திரன்
Advertisement

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

Advertisement

”நேற்று முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து நான் எழுப்பிய கேள்விகளில் ஒரு சிறிய பாகத்திற்கு மட்டும் திசைத்திருப்பும் விதமாக பதிலளித்துவிட்டு, முக்கிய கேள்விகளுக்கு மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்துள்ளார்  தொழில் துறை அமைச்சர்  TRB ராஜா அவர்கள். தமிழக மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்துவதற்காக, முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களையும், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களையும் நோக்கி மீண்டுமொரு முறை எனது கேள்விகளைக் கேட்கிறேன்.

1. நான் நேற்று மூன்று நிறுவனங்களைப் பற்றி குறிப்பிட்ட நிலையில், அமைச்சர் TRB ராஜா அவர்களோ, Knorr-Bremse நிறுவனத்தைப் பற்றி மட்டுமே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், Nordex India Manufacturing Pvt Ltd, Ebmpapst India ஆகிய மற்ற இரு நிறுவனங்களைப் பற்றி ஏன் பதிலளிக்கவில்லை? கடந்த 1996 ஆம் ஆண்டு முதலே Ebmpapst India நிறுவனமும், 18.12.2020 முதலே Nordex India நிறுவனமும் தமிழகத்தில் இயங்கி வருகின்றன என்பதை அமைச்சரால் மறுக்கமுடியுமா? அப்பொழுது யார் பொய் பேசுகிறார்கள்?

2. ⁠வெளிநாடுகளுக்கு அமைச்சர்களை மட்டும் அனுப்பி, ரூ. 7 லட்சம் கோடி முதலீடுகளை உத்தரப்பிரதேச முதல்வர்யோகி ஆதித்யநாத் அவர்கள் ஈர்த்த நிலையில், ஆறு முறை வெளிநாட்டிற்கு சென்றும் சில ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை மட்டுமே தமிழக முதல்வர் ஈர்த்துள்ளது ஏன்?

3. அடுத்தது, ⁠நமது முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் பெரும் பங்கு வெறும் காகித அளவிலேயே நிற்பது ஏன்? அவற்றால் இதுவரை எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன? இதற்கான ஒரு திட்டவட்டமான வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க முதல்வர் ஏன் தயங்குகிறார்?

திமுக அரசின் தவறைச் சுட்டிக்காட்டினாலே தமிழகத்தை இழிவுபடுத்திவிட்டதாக திசைத்திருப்புவதுதான் திராவிட மாடலின் வழக்கம். ஆகவே, திரும்பத் திரும்ப திசைத்திருப்புவதை விட்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டு முதலீட்டுப் பயணங்களைப் பற்றி வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள். இந்தப் பயணங்கள் உண்மையிலேயே தமிழகத்திற்கு பயன் அளித்ததா? இல்லையா? என்பதைப் பொதுமக்களே தீர்மானிக்கட்டும்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement