"பிரதமர் மோடி கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டும்" - அமைச்சர் மனோ தங்கராஜ்!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாஜகவின் தவறுகளை யார் சுட்டி காட்டினாலும், நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கேட்டாலும் அவர்கள் சொல்லுகின்ற வார்த்தை அரசியல் செய்கின்றனர். நாங்கள் அரசியல் தான் செய்வோம், நாங்கள் செய்கின்ற அரசியல் மக்களுக்கான அரசியல், அவர்கள் பண்ணுவது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான அரசியல்.
நாங்கள் மக்களுக்கான அரசியல் செய்யும் போது மக்களுக்கு அவர்கள் செய்யும் துரோகத்தை மக்கள் முன் நாங்கள் கொண்டு செல்வது எங்கள் கடமை. ஊருக்கே வெளிச்சம் கல்வி நிதியில் அவர்கள் என்ன செய்கின்றனர் என்று. பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு இன்று அனைவருக்கும் கல்வி, கல்வி உரிமை என்ற கோட்பாட்டில் வந்து இருக்கிறோம்.
அந்த உரிமையை அழிக்கின்ற முயற்சியில் தான் பாஜக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி கோட்டு சூட்டை கழட்டி விட்டு கடையில் சென்று பொருட்கள் வாங்க வேண்டும், அப்படி வாங்கினால் தான் விலைவாசி குறித்து தெரிய வரும். முதலில் அடிமாட்டு விலைக்கு க்ரூட் ஆயில் வாங்கி விட்டு இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி ஏழைகளின் வயிற்றில் அடிப்பதை அவர்கள் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.