For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இந்தியாவை உலக அளவில் உயர்த்தியவர் பிரதமர் மோடி" - நயினார் நாகேந்திரன்!

அமெரிக்காவே வெட்கப்படும் அளவிற்கு இந்தியாவை உலக அளவில் உயர்த்தியவர் பிரதமர் மோடி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
07:34 AM Sep 21, 2025 IST | Web Editor
அமெரிக்காவே வெட்கப்படும் அளவிற்கு இந்தியாவை உலக அளவில் உயர்த்தியவர் பிரதமர் மோடி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
 இந்தியாவை உலக அளவில் உயர்த்தியவர் பிரதமர் மோடி    நயினார் நாகேந்திரன்
Advertisement

கோவை மாவட்டம் கணபதி பகுதியில் நடைபெற்ற மோடியின் தொழில் மகள் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மேலிடப் பொறுப்பாளர், அரவிந்த் மேனன், தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்ராஜ், அதிமுக கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராமன், i.j.k கட்சியின் லீமா ரோஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "2 கோடி ரூபாய் அளவில் சிறப்பான திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். ஆறு மாதத்திற்கு காவல்துறை வர மாட்டார்கள். பாஜக மக்களுக்காக நன்மை செய்யக்கூடிய கட்சி. நன்மை செய்யக்கூடியவர் பிரதமர் மோடி. அமெரிக்காவே வெட்கப்படும் அளவிற்கு இந்தியாவை உலக அளவில் உயர்த்தியவர் பிரதமர்.

நல்ல இதயத்துக்கு சொந்த காரர், சாதனை தலைவர்கள் என்பார்கள், சரித்தர தலைவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி. 17 வன்கொடுமைகள் 5 நாட்களில் நடந்துள்ளது. அதில் 12 பேர் இளம் பெண் குழந்தைகள். முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் நடக்கிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் சந்தித்து வருகிறார், அதனை பத்திரிக்கையாளர்கள் ஏளனம் செய்கின்றனர், இதற்கு காரணம் ஸ்டாலின். ஆட்சி மாற்றம் தேவை என்பதே பிரதமரின் பிறந்த நாள் விழாவில் நாம் ஏற்கும் உறுதியாக இருக்க வேண்டும்.

கொடுக்கிற இடத்தில் இருப்பவர் பிரதமர் மோடி, அவரகள் எடுக்குற இடத்தில் இருப்பவர்கள் முதல்வர் ஸ்டாலின். ஜி ஸ்கொயர் பொள்ளாச்சியில் வனப்பகுதியை எடுத்துள்ளது, அதற்கு வழக்கு போட வேண்டும். விஜய் வந்துள்ளார், ஏதோ கொள்கை வைத்திருப்பதை போல் பேசுகிறார். எத்தனை பேர் எத்தனை கூட்டணி இருந்தாலும் அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தே தீரும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement