"மீன்வளத்தை பெருக்க கடல்பாசிக்கென்று நிதி ஒதுக்கியவர் பிரதமர் மோடி" - எல்.முருகன்!
டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் அஞ்சல் தலை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தபால் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவான்ஸ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "பெரும்பிடுகு முதரையருக்கு அஞ்சல் தலை வெளியீடுவதில் மிக்க மகிழ்ச்சி. நம்மில் ஒருவர் தமிழர் குடியரசு துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் அதனை வெளியிட்டது மிகுந்த மகிழ்ச்சியானது. தமிழ்நாட்டிற்கு 14 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி என்பது ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில், "நாடு முழுவதும் உள்ள அறியப்படாத தலைவர்களின் பெருமைகளை வெளிகொண்டு வர வேண்டும் என்பது தான் பிரதமர் மோடி அவர்களின் விருப்பம். அந்த வகையில் முத்தரையர் மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் தபால் தலை வெளியிட பிரதமர் அனுமதி வழங்கியதற்கு நன்றி. தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களின் பெயர்களை தான் பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்திருக்கும் வைக்கிறார்கள்.
மீனவர் நலனுக்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது பிரதமர் மோடி. மீன்வளத்தை பெருக்க கடல்பாசிக்கென்று நிதி ஒதுக்கியது பிரதமர் மோடி. தமிழ் மொழியின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சென்றவர் பிரதமர் மோடி என்று தெரிவித்துள்ளார்.