“பிரதமர் மோடி நம் குழந்தைகளை உலகத் தரம் வாய்ந்தவர்களாக தயார் செய்கிறார்” - பாஜகவின் NEP ஆதரவு மாநாட்டில் அண்ணாமலை பேச்சு!
திருச்சியில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் மாநாடு நடத்தினர். இதில் பங்கேற்ற தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது, “நாம் கஷ்டப்பட்டாலும் நம்முடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு கூடியுள்ளோம். திமுக-வில் அண்ணாவின் காலத்திற்கு பிறகு கூண்டுக்கிளியாக உள்ளனர். அவர்களுக்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாது. 1968ல் ஒரு கல்விக்கொள்கை வந்தது. பின்பு 1986ல் ஒன்னொரு கொள்கை வந்தது. இது இரண்டாம் கல்வி கொள்கை என்று சொல்லுவோம். 1992ல் திருத்தப்பட்ட கல்விக்கொள்கை வந்தது. சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் இரண்டு கல்விக்கொள்கைதான் இருந்தது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, ஏழை மக்களின் முன்னேற்றம் கல்வியை சார்ந்த் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத்தார்கள். அந்த குழு 2019ல் தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையை கொடுத்தார்கள். அதில் முக்கியமான பலவற்றை கூரினார்கள். அதில் மிக முக்கியமானது எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதுதான். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயமாக தாய்மொழியில் படிக்க வேண்டும் என்பது தேசிய கல்வி கொள்கையில் மிக முக்கியமானது.
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் சொல்லிக் கொடுக்க முயற்சி எடுப்போம். வரைவு அறிக்கையில் மூன்றாவது மொழி கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என்று இருந்தது. இதை மாற்றி எதாவது ஒரு இந்திய மொழியை படிக்கலாம் என கொண்டுவந்தது தான் மும்மொழிக்கொள்கை. திமுக, காங்கிரஸ் உடன் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது மூன்றாவது மொழி இந்திதான் இருந்தது.
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான பாஜக-வின் கையெழுத்து இயக்கத்தில் 18 நாட்களில் 26 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். இது அரசியல் புரட்சி . 2 கோடி இலக்கை தாண்டி கையழுத்து இயக்கம் செல்லும். திமுக மாதத்திற்கு ஒரு கையெழுத்து இயக்கம் நடத்துவார்கள். ஆனால், அது என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. திமுக-வில் யாரும் படித்து அதிகாரத்திற்கு வரவில்லை. இவர்களுக்கு கல்வியை பற்றி என்ன தெரியும். குற்றப் பின்னணி இருக்கும் அமைச்சர்கள் கல்வி கொள்கையை பற்றி பேசுவதை ஏற்றுக்கொள்வீர்காளா? காமராஜர் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். எம்ஜிஆர் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம் அவர்களிடம் தன்மை இருக்கிறது. பிரதமர் மோடி சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்.
அரசு பள்ளியில் புதிய தேசிய கல்விக்கொள்கை வந்துவிட்டால், 11ஆம் வகுப்பில் ஆங்கிலம், கொரிய மொழி, ஜப்பானிய மொழி உள்ளிட்ட பல மொழிகள் படிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மோடி நம்முடைய குழந்தைகளை உலகத் தரம் வாய்ந்தவர்களாக தயார் செய்து வருகிறார். அரசு பள்ளியில் படித்தாலும் தனியார் பள்ளியில் படித்தாலும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதுதான் புதிய தேதிய கல்விக்கொள்கையின் நோக்கம். ஆனால், இவர்கள் நடத்தும் தனியார் பள்ளியில் ஒரு கல்வி, அரசு பள்ளிக்கு தரம் இல்லாத கல்வியை கொடுத்து, திமுக-விற்கு போஸ்டர் ஒட்ட மாணவர்களை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
திமுக-வினர் நடத்தும் பல பள்ளிகளில் மூன்று மொழியை சொல்லிக்கொடுக்கிறார்கள். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாட்டை தாண்டினால் இரண்டு பேரை அழைத்து செல்வார். ஏனென்றால் அங்கு உள்ளவர்கள் பேசினால் அவருக்கு புரியாது. அவர் பேசுவது அங்குள்ளவர்களுக்கு தெரியாது. நாடாளுமன்றத்தில் அந்த 39 பேர் பேசுவது யாருக்கும் புரியாது. அங்குள்ளவர்கள் பேசுவது அந்த 39 பேருக்கு புரியாது. இது தமிழ்நாடு வளராமல் இருக்க அடிப்படைக் காரணம்.
நேற்று(மார்ச்.22) நடந்தது உப்பு சப்பு இல்லாத கூட்டம். யாரு பேசுவதும் யாருக்கும் புரியாது. தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் நடக்காது என தெளிவாக சொல்லிவிட்டார்கள். விகிதாச்சார அடிப்படையில் நடக்கும் என்பதையும் சொல்லிவிட்டார்கள். 543 எம்.பிகளில் தமிழ்நாட்டில் 39 எம்.பி.-கள். இது 7.17 %. உ.பி.யில் 80 எம்.பி.கள். அங்கு 14.74%. நாளைக்கு 543 அதிகரித்தால் தமிழ்நாட்டுக்கு 7.17 %. இருக்கும், அவ்வளவுதான்”
இவ்வாறு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.