"நல்ல உடல்நலத்துடன் மக்கள் பணிகளை தொடர வேண்டும்" - ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஏப்.3) தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஆளுநரின் பிறந்தநாளை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் R.N. ரவி, நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என பாஜக மாநில அண்ணாமலை அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. R.N. ரவி அவர்களுக்கு, @BJP4Tamilnadu சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். தமிழகத்தின் முன்னேற்றத்துக்காகவும், கல்விச் சீர்திருத்தங்களுக்காகவும்… pic.twitter.com/qKShufYCkM
— K.Annamalai (@annamalai_k) April 3, 2025
இது குறித்து அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழ்நாடு ஆளுநர் R.N. ரவிக்கு,
பாஜக சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், கல்விச் சீர்திருத்தங்களுக்காகவும் அயராது உழைப்பவர். தமிழ்நாடு ஆளுநர் R.N. ரவி, நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.