“பாஜகவின் வெறுப்பு மற்றும் ஊழல் அரசியலுக்கு வாக்குகள் மூலம் மக்கள் பதில் அளித்துள்ளனர்” - INDIA கூட்டணி கூட்டத்திற்கு பின் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!
பாஜகவின் வெறுப்பு மற்றும் ஊழல் அரசியலுக்கு மக்கள் வாக்குகள் மூலம் பதில் அளித்துள்ளதாக INDIA கூட்டணி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள் இன்று வெளிவந்தன. இதன்படி, நடந்து முடிந்த தேர்தலில், பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாகவே பெற்றுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
“இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன், ஒரே குரலாக மக்களுடைய தீர்ப்பை வரவேற்கிறோம். தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி. இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து பாஜகவின் மக்கள் விரோத போக்கை தொடர்ந்து எதிர்ப்போம். இந்தியா கூட்டணி தலைவர்கள் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினோம்.
INDIA गठबंधन के नेताओं ने देश में जारी राजनीतिक हालातों पर चर्चा की।
हमारी बैठक में कई सारे सुझाव आए और आखिर में जो निष्कर्ष आया, उसके बारे में आपको बताना चाहता हूं:
The constituents of the INDIA Bloc thank the people of India for the overwhelming support received by our… pic.twitter.com/Cxy5Em3lA6
— Congress (@INCIndia) June 5, 2024
இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்த நாட்டு மக்களுக்கு மனமார்ந்த நன்றி. பாஜகவின் வெறுப்பு மற்றும் ஊழல் அரசியலுக்கு மக்கள் வாக்குகள் மூலம் பதில் அளித்துள்ளனர். பாஜகவின் பாசிச அரசியலை எதிர்த்து இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும். மக்களின் விருப்பத்தை இந்தியா கூட்டணி பூர்த்தி செய்துள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்ற பாடுபடுவோம்”
இவ்வாறு தெரிவித்தார்.