For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் நிலைகுலையவிருக்கும் நெல் மூட்டைகள்" - நயினார் நாகேந்திரன்!

லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மேலும் தேக்கமடையும் அபாயம் உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
12:03 PM Oct 30, 2025 IST | Web Editor
லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மேலும் தேக்கமடையும் அபாயம் உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
 லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் நிலைகுலையவிருக்கும் நெல் மூட்டைகள்    நயினார் நாகேந்திரன்
Advertisement

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகளுக்கான வாடகையை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டியின் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

Advertisement

திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை வெளி மாவட்ட அரவைகளுக்காக எடுத்துச் செல்லும் செயல்முறையில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கிவருகின்றன. இந்நிலையில் இந்தப் போராட்டத்தின் காரணமாக அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மேலும் தேக்கமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே மழை வெள்ளத்தாலும், முறையான கொள்முதல் நடைபெறாத காரணத்தாலும் பல மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் முளைப்பு கட்டிப்போயுள்ள நிலையில், நமது அரசு இயந்திரத்தையும் விவசாயப் பெருமக்களையும் மேலும் நிலைகுலையைச் செய்யும் இந்தப் போராட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டியது திமுக அரசின் தலையாய கடமை. எனவே, அரசு அதிகாரிகள் உடனடியாக லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டுமெனவும், ஏற்கனவே தேக்கத்தில் உள்ள நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டுமெனவும் முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement