"ஒ.பி.எஸ் தலைமை பண்புடன் செயல்படவில்லை" - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் எழுச்சி பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருகிறார். மதுரை மாவட்டத்தில் நான்காம் கட்டமாக செப்டம்பர் மாதம் எழுச்சி பயணம் நடைபெறவுள்ளது. மாவட்டம் முழுதும் உள்ள மக்களை எழுச்சி பயணித்திற்கு வீடு, வீடாக சென்று அழைக்க உள்ளோம். எடப்பாடி பழனிச்சாமியின் சிரிப்பு தெய்வ சிரிப்பாக உள்ளது. தூய்மை பணியாளர்கள் கைதில் திமுக அரசு அடக்குமுறையை கையாண்டுள்ளது.
தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடவில்லை தமிழகம் என்னவாகும், எடப்பாடி பழனிச்சாமி எழுச்சி பயணம் வெற்றி பெற்றுள்ளதால் ஒ.பி.எஸ் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்கிறார். ஒபிஎஸ் ஒரு நிமிடம் யோசித்து இருந்தால் அதிமுகவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டுட்டு இருக்க மாட்டார். ஒ.பி.எஸ் தலைமை பண்புடன் செயல்படவில்லை, அவர் எத்தனை முறை தடம் புரண்டு இருக்கிறார் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது ஓபிஎஸ் துணை முதலமைச்சராக பதவி வகித்தார், அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆளுமை அவருக்கு தெரியாதா? ஒ.பி.எஸ் கருத்துக்கள் அவருடைய இயலாமையை காட்டுகிறது. தடம் புரண்டு சென்ற ஓபிஎஸின் கருத்துக்களை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. ஓபிஎஸின் கருத்துக்கள் அனுதாபத்தை தேடும் விதமாகவும், பிரச்சனைகளை திசை திருப்பும் விதமாகவும் அமைந்திருக்கிறது.
தடம்புரண்டு சென்ற ஒ.பி.எஸின் கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஈபிஎஸ் - ஒபிஎஸ் இணைவார்களா என்ற கேள்விக்கு, எல்லாவற்றுக்கும் காலம் உள்ளது. காலம் பதில் தரும். வெயிட் அன் சி.
எம்ஜிஆர் ஜெயலலிதா காட்டிய வழியில் தான் பயணிப்போம். தலைமைக்கு எதிராக விளக்கம் கொடுப்பதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். அரசியல் நாகரிகம் புதிதாக கற்றுத்தர வேண்டியதில்லை.
எல்லாரும் அண்ணன்கள் தான். ஒபிஎஸ் என்றும் அண்ணன் தான். அனுதாபம் தேடுவது திசை திருப்புகிற வேலை அவருக்கு தோல்வியை தான் கிடைக்கச் செய்யும். தடம் புரண்டவர்கள் தடம் மாறியவர்களின் கருத்துக்களை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.