Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது" - பிரதமரின் கருத்துக்கு காங். தலைவர் #MallikarjunKharge பதில்!

06:52 AM Nov 01, 2024 IST | Web Editor
Advertisement

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது சாத்தியமற்றது என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Advertisement

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நர்மதை நதிக்கரையில் அவரின் உருவச்சிலை அமைந்துள்ள குஜராத் மாநிலம் கேவாடியா பகுதியில் விமானப் படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு வீரர்களின் சாகசங்களைக் கண்டு ரசித்தார்.

இதனையடுத்து, அங்கு பேசிய பிரதமர் மோடி, "ஒரே நாடு ஒரே தேர்தலை நோக்கி நாங்கள் இப்போது செயல்பட்டு வருகிறோம். முன்பு நாடு முழுக்க வேறு வேறு வரி செலுத்தும் முறைகள் இருந்தன. ஆனால், பாஜக அரசு ஒரே நாடு ஒரே வரி என்ற முறையில் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியது" என்று தெரிவித்தார். இந்த நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று (அக்.31) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

“பிரதமர் மோடி அவர் சொல்வதை செய்ய மாட்டார். ஏனென்றால், நாடாளுமன்றத்தில் ​​நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைவரின் கருத்தும் ஒன்றாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அந்த வகையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது சாத்தியமற்றது.”

இவ்வாறு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

Tags :
CongressGujaratIndiaMallikarjun KhargeNarendra modinews7 tamilPM Modi
Advertisement
Next Article