For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

’நவம்பர் 5-ல் சிறப்பு பொதுக்குழு கூட்டம்’- தவெக தலைவர் விஜய் அறிவிப்பு...!

தவெகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டமனது நவம்பர் 5-ல் நடைபெறுவதக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
05:18 PM Oct 29, 2025 IST | Web Editor
தவெகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டமனது நவம்பர் 5-ல் நடைபெறுவதக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
’நவம்பர் 5 ல்  சிறப்பு பொதுக்குழு கூட்டம்’  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Advertisement

தவெக தலைவர் விஜய் நவம்பர் 5-ல் தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

Advertisement

”என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம், நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு. உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது. சூழ்ச்சியாளர்கள். சூதுமதியாளர்கள் 'துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்', அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது.

கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான். நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் நாம் எடுத்து வைக்க வேண்டும்.
இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்த கட்டத் தொடர்நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும்

ஆகவே, இவை குறித்து முடிவுகள் எடுக்கும் பொருட்டு, கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளோம். அதன்படி, வருகிற 05.11.2025 புதன்கிழமை அன்று. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. சிறப்புப் பொதுக்குழுவில்  வருங்காலம் நமதென்று காட்ட தீர்க்கமாகத் திட்டமிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்

Tags :
Advertisement