For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நோடோபதி"... கர்பிணியை தாக்கிய அரியவகை நோய் - சிகிச்சை அளித்து குணப்படுத்திய அரசு மருத்துவர்கள்!

09:18 AM Jun 13, 2024 IST | Web Editor
 நோடோபதி     கர்பிணியை தாக்கிய அரியவகை நோய்   சிகிச்சை அளித்து குணப்படுத்திய அரசு மருத்துவர்கள்
Advertisement

உலக அளவில் 8 சதவீதம் பேரை மட்டுமே தாக்க வாய்ப்புள்ள  ‘நோடோபதி’ நரம்பு நோய் பாதித்த கர்ப்பிணியை,  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் தொடர் சிகிச்சையளித்து குணப்படுத்தினர்.  

Advertisement

உலக அளவில் 8 சதவீதம் பேரை மட்டுமே தாக்க வாய்ப்புள்ள ‘நோடோபதி’ நரம்பு நோய் பாதித்த கர்ப்பிணியை,  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் தொடர் சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளனர்.  இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை  டீன் தா்மராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது,

"தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்தவர் 8 மாத கா்ப்பிணியான ஷோபனா (28).  இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் திடீரென கை, கால்கள் செயலிழந்தன. இதனையடுத்து அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவரை பரிசோதனை செய்ததில்,  அவருக்கு ஜிபிஎஸ் என்ற நரம்பு மண்டல பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.  அவருக்கு சிறப்பு மருந்துகள் வழங்கப்பட்டதையடுத்து,  குணமடைந்த அவா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.   ஆனால் சில வாரங்களில் அவருக்கு மீண்டும் கைகால்கள் செயலிழந்தன.

இதையடுத்து மீண்டும் அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.  அவா் கா்ப்பிணியாக இருந்ததால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  அவர் குணமடைந்த நிலையில்,  மதுரை அரசு மருத்துவமனையிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது.  பிறகு அவா் குழந்தையுடன் வீட்டுக்கு சென்றார்.

அவர் வீட்டுக்குச் சென்ற ஒரு வாரத்திலேயே மீண்டும் இதே நோயால் பாதிக்கப்பட்டாா்.  பின்னர் இந்நோய் பாதிப்பு குறித்து தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  இந்த பரிசோதனையில்,  அவருக்கு உலகில் மிக அரிதான நோயான ‘நோடோபதி’ இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நோய் பாதிப்பு உலகமக்கள் தொகையில் 4 முதல் 8 சதவீதம் பேருக்குதான் வர வாய்ப்புள்ளது.  ஷோபனாவுக்கு பயன்படுத்தப்பட்ட மருந்துகளின் விலை ரூ.15 லட்சம்.  சிகிச்சைக்குரிய அனைத்து செலவுகளும் சோ்ந்து ரூ.20 லட்சம் ஆகும்.  இது முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டது.  தொடா் சிகிச்சைக்கு பிறகு ஷோபனா தற்போது முழு உடல்நலம் பெற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.  தற்போது அவரால் வழக்கம் போல நடக்கவும்,  கைகளை பயன்படுத்தவும் முடிகிறது"  என்றனா்.

பேட்டியின்போது நரம்பியல் பிரிவு துறைத் தலைவர் முருகன், பேராசிரியர்கள் ஜஸ்டின், இளங்கோவன், உதவிப்பேராசிரியர் செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
Advertisement