For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“எவ்வளவு ஓடினாலும் அண்ணாமலைக்கு டெபாசிட் கூட கிடைக்காது” - கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

07:51 AM Feb 17, 2024 IST | Jeni
“எவ்வளவு ஓடினாலும் அண்ணாமலைக்கு டெபாசிட் கூட கிடைக்காது”   கே பாலகிருஷ்ணன் விமர்சனம்
Advertisement

மோடி அரசால் தங்களுடைய முகத்தை காண்பித்து மக்களிடம் வாக்கு கேட்பதற்கு சாதனைகள் எதுவும் இல்லாததால் தான், ராமபிரானின் முகத்தை காண்பித்து வாக்கு கேட்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்.

Advertisement

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராக பல்வேறு துறைகளில் நிறைவேற்றிய பணிகளை, எழுப்பிய குரல்களை - "5 ஆண்டுகள் 150 வெற்றிகள்" என்ற தலைப்பில் நூலாக வெளியிடும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. அந்த நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட அமைச்சர் மூர்த்தி பெற்றுக்கொண்டார்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது :

“பாஜகவின் மோசமான நாடாளுமன்ற அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் சிறப்பாக பணியாற்றியவர் சு.வெங்கடேசன். இந்த நாடாளுமன்ற தேர்தல் மிக கடுமையான தேர்தல். பாஜகவிடம் இப்போது பிரிந்திருப்பதாக சொல்கிற அதிமுகவினரின், அடிப்படை சிந்தனையில் மாற்றமில்லை. 5 ஆண்டு காலம் பாஜகவின் எல்லா செயல்களுக்கும் துணை போனவர்கள் அவர்கள். தேர்தலுக்கு பின்னால் என்ன முடிவை எடுப்பார்கள் என தெரியவில்லை. எனவே இந்த தேர்தலில் அதிமுகவையும் வீழ்த்த வேண்டியிருக்கிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் நடக்கிற கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப் போவதாக திட்டமிட்டிருக்கிறார்கள்.இந்தியாவை வடக்கு, தெற்கு என்பதன் அடிப்படையில் பிளவுபடுத்தும் நோக்கிலான முயற்சிகள் தான் இவை.  ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் எண்ணிக்கை இந்தாண்டு அதிகம். அதற்காக கேரளாவிலும், தமிழகத்திலும் பாஜக வெல்ல முடியுமா? எவ்வளவு ஓடினாலும் அண்ணாமலைக்கு டெபாசிட் கூட கிடைக்காது. சு.வெங்கடேசன் சொல்வதை போல, இப்படி உங்களுடைய ஆட்சியில் செய்தவை என சாதனைகளை, மோடி அரசால் ஏதாவது சொல்ல முடியுமா? உங்களிடம் அப்படி எந்த சாதனையும் இல்லை. அதனால் தான் உங்களுடைய முகத்தை காட்டி ஓட்டு கேட்பதற்கு பதிலாக ராமபிரானை காண்பித்து ஒட்டுக்கேட்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது”.  இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் திடீர் விலகல்!

தொடர்ந்து பேசிய எம்.பி. சு.வெங்கடேசன், “இந்தியாவில் நிதித்துறை இணையமைச்சர் அவர் மாவட்டத்தில் பெற்றுக்கொடுத்த கல்விக்கடனை விட, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பெற்றுக்கொடுத்த அதிக நிவாரண நிதியை விட, சமூகநலத்துறை இணையமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்த உதவிகளை விட ஒரு எதிர்கட்சி எம்பியாக நாங்கள் அதிக நிதியை கேட்டுக் கொடுத்துள்ளோம். இப்படி ஒரு சாதனையை செய்ய முடியுமா என உங்களுக்கு சவால் விடுகிறோம்” என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement