For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மோடி எத்தனை முறை படையெடுத்தாலும் பாஜகவை தமிழ்நாடு மக்கள் ஏற்கமாட்டார்கள்!” - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு!

04:29 PM Mar 07, 2024 IST | Web Editor
“மோடி எத்தனை முறை படையெடுத்தாலும் பாஜகவை தமிழ்நாடு மக்கள் ஏற்கமாட்டார்கள் ”    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
Advertisement

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் பாஜகவை
மக்கள் ஏற்க மாட்டார்கள் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Advertisement

மதுரை முத்துப்பட்டியில் அங்கன்வாடி கட்டட பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்ற
பின்னர் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும்,  சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:

எஸ்.பி.ஐ. வங்கியின் தேர்தல் பத்திர விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது போல தெரிகிறது.  தேர்தல் பத்திர விவகாரத்தில் அஞ்சுவது காங்கிரஸ்,  திமுக தான்,  நாங்கள் இல்லை.

திமுக கூட்டணியில் எத்தனை கட்சி சேர்ந்தாலும் மக்கள் அவர்களை ஏற்கப்போவதில்லை.
அதிமுக கூட்டணிக்கு வாங்க என நாங்கள் யாரையும் கூப்பிடவில்லை.  பாஜகவையே வேண்டாம் என்று சொன்னவர்கள் நாங்கள்.  வாயிலேயே வடை சுடுவதில் இந்திய அளவில் மோடியும்,  தமிழகத்தில் ஸ்டாலினும் முதலிடத்தில் உள்ளனர்.  ‘நீங்கள் நலமா’ என புதிதாக பெயர் வைத்து ஒரு திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறார் ஸ்டாலின்.

பிரதமர் மோடி நன்றாக நடிக்கிறார்.  அவர்கள் கட்சி தலைவர்களான வாஜ்பாய்,
அத்வானிக்கு மாற்றாக அதிமுக தலைவர்களின் புகழை பாடுகிறார்.  அதிமுகவுக்கு ஓட்டு
போடும் மக்களை ஏமாற்ற மோடி முயற்சிக்கிறார்.  கஜினி முகமது போல பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு படையெடுத்தாலும் சரி,  மக்கள் ஏற்க மாட்டார்கள். அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது.  பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது.  அதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள்.  ராமர் கோயில் கட்டுவதை குறை சொல்லவில்லை.  அதை மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்து செல்ல கூடாது.  பாஜக எவ்வளவு உருண்டாலும் அவர்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் ஒரு அரசியல் நாடகம் தான்.  தமிழ்நாட்டுக்கு
இத்தனை முறை வந்த பிரதமர் ஏன் இந்த கட்டுமானம் குறித்து ஒரு வார்த்தை கூட
பேசவேயில்லை.  எப்படியாவது மருத்துவமனையை கட்டி முடித்தால் சரி தான்.

இவ்வாறு செல்லூர் ராஜு கூறினார்.

Tags :
Advertisement