For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

NDA vs INDIA: மக்களவைத் தேர்தலில் யார் யாருக்கு எத்தனை இடங்கள்? வாக்கு சதவிகிதம் எவ்வளவு?

12:50 PM Jun 05, 2024 IST | Syedibrahim
nda vs india  மக்களவைத் தேர்தலில் யார் யாருக்கு எத்தனை இடங்கள்  வாக்கு சதவிகிதம் எவ்வளவு
Advertisement

மக்களவைத் தேர்தல் 2024  NDA மற்றும் INDIA கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடங்கள்? வாக்கு சதவிகிதம் எவ்வளவு ? குறித்து விரிவான காணலாம்.

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,  காங்கிரஸ்,  திமுக,  சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது .  INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி  பெறவில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,  விடுதலை சிறுத்தைகள்,  மதிமுக,  இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.

இந்திய அளவில் இரண்டு முக்கிய கூட்டணிகளான இந்தியா கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவை தேர்தலை எதிர்கொண்டன.  அவை வெற்றி பெற்ற தொகுதிகள் மற்றும் வாக்கு சதவிகிதம் குறித்து விரிவாக காணலாம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி :
  • பாஜக - வெற்றி பெற்ற இடங்கள் 240 ( 36.56%)
  • தெலுங்கு தேசம் கட்சி - வெற்றி பெற்ற இடங்கள் 16 ( 1.98%)
  • ஐக்கிய ஜனதா தளம் - வெற்றி பெற்ற இடங்கள் 12 ( 1.25%)
  • ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா -  வெற்றி பெற்ற இடங்கள் 7 ( 1.15%)
  • லோக் ஜன சக்தி கட்சி - வெற்றி பெற்ற இடங்கள் 5 (0.44%)
  • மதச்சார்பற்ற ஜனதா தளம் - வெற்றி பெற்ற இடங்கள் 2 (0.34%)
  • ராஷ்ட்ரிய லோக் தளம் - வெற்றி பெற்ற இடங்கள் 2 (0.09%)
  • ஜனசேனா கட்சி - வெற்றி பெற்ற இடங்கள் 2 (0.02%)
  • அசாம் கன பரிசத் - வெற்றி பெற்ற இடம்  1 (0.20%)
  • அஜித் பவார் தரப்பு NCP - வெற்றி பெற்ற இடம்  1 (0.32%)
  • சிக்கிம் கிராந்திகார் மோர்ச்சா - வெற்றி பெற்ற இடம்  1 (0.03%)
  • ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி - வெற்றி பெற்ற இடம் 1 ( 0.08%)
  • ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா - வெற்றி பெற்ற இடம் 1 
  • அப்னா தளம் - வெற்றி பெற்ற இடம் 1 (0.13%)
  • அனைத்து ஜார்கண்ட் மாணவர் கட்சி  - வெற்றி பெற்ற இடம் 1 (0.07%)
  • சிரோமணி அகாலி தளம் - வெற்ற பெற்ற இடம் 1

இந்தியா கூட்டணி
  • இந்திய தேசிய காங்கிரஸ் - வெற்றி பெற்ற இடங்கள் - 99 (21.19%)
  • சமாஜ்வாதி கட்சி - வெற்றி பெற்ற இடங்கள் 37 ( 4.58%)
  • திரிணாமுல் காங்கிரஸ் - வெற்றி பெற்ற இடங்கள் 29 (4.37%)
  • திராவிட முன்னெற்ற கழகம் - வெற்றி பெற்ற இடங்கள் 22( 1.82%)
  • சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி- வெற்றி பெற்ற இடங்கள் 8 ( 0.92%)
  • உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா- வெற்றி பெற்ற இடங்கள் 9 ( 1.48%)
  • ராஷ்ட்ரிய ஜனதா தளம்- வெற்றி பெற்ற இடங்கள் 4 (1.57%)
  • ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி- வெற்றி பெற்ற இடங்கள் 2 (0.18%)
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- வெற்றி பெற்ற இடங்கள் 4 (1.76%)
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- வெற்றி பெற்ற இடங்கள் 2 (0.49%)
  • இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- வெற்றி பெற்ற இடங்கள் 3 ( 0.27%)
  • ஆம் ஆத்மி கட்சி- வெற்றி பெற்ற இடங்கள் 3 (1.11%)
  • ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- வெற்றி பெற்ற இடங்கள் 3 ( 0.41%)
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி- வெற்றி பெற்ற இடங்கள் 2 
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (ML)- வெற்றி பெற்ற இடங்கள் 2 (0.27%)
  • மறுமலர்ச்சி திமுக - வெற்றி பெற்ற இடம் 1
  • கேரளா காங்கிரஸ் - வெற்றி பெற்ற இடம் 1
  • புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி - வெற்றி பெற்ற இடம் 1
  • ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி - வெற்றி பெற்ற இடம் 1
  • ஆசாத் சமாஜ் கட்சி - வெற்றி பெற்ற இடம் 1
பிற கட்சிகள்
  • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி - வெற்றி பெற்ற இடங்கள் 4 (2.06%)
  • மக்களின் குரல் கட்சி - வெற்றி பெற்ற இடம் 1 (0.09%)
  • ஜோரம் மக்கள் கட்சி - வெற்றி பெற்ற இடம் 1 (0.03%)
  • ஆல் இந்தியா மஜ்லிஸே இதிஹாதுல் முஸ்லிமீன் - வெற்றி பெற்ற இடம் 1 ( 0.22%)
  • பாரத் ஆதிவாசி கட்சி - வெற்றி பெற்ற இடம் 1
  • சுயேட்சைகள் - வெற்றி பெற்ற இடங்கள் 7
Tags :
Advertisement