உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று இரவு சந்திக்கும் நயினார் நாகேந்திரன்
தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சியினரும் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே கடந்த 11 ஆம் தேதி தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.
இதனையடுத்து நேற்று டெல்லி சென்ற தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது அவர், மக்கள் சந்திப்பு பயணத்தின் போது பெறப்பட்ட நிதி அமைச்சகம் சார்ந்த மனுக்களை அவரிடம் அளித்தார்.
இதனை தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்கான நேரம் கேட்கப்பட்டது. இந்த சூழலில் நயினார் நாகேந்திரன் இன்று இரவு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருவரும் அதிமுக உடனான தொகுதி ஒதுக்கீடு, பிரச்சாரம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.