For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நெகிழ்ச்சியான வரவேற்பை பெற்ற “மை மெல்பெர்ன்”

கோவா திரைப்பட விழாவில், ஆப்கானிஸ்தானில் நடந்த உண்மை சம்பவத்தை குறும்படமாக கொண்ட “மை மெல்பெர்ன் ( My Melbourne)” திரைப்படம் நெகிழ்ச்சியான வரவேற்பை பெற்றுள்ளது.
09:54 PM Nov 21, 2025 IST | Web Editor
கோவா திரைப்பட விழாவில், ஆப்கானிஸ்தானில் நடந்த உண்மை சம்பவத்தை குறும்படமாக கொண்ட “மை மெல்பெர்ன் ( My Melbourne)” திரைப்படம் நெகிழ்ச்சியான வரவேற்பை பெற்றுள்ளது.
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நெகிழ்ச்சியான வரவேற்பை பெற்ற “மை மெல்பெர்ன்”
Advertisement

இந்திய சர்வதேச திரைப்பட விழாவான IFFI ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகின்றன. கோவா சர்வதேச திரைப்பட விழா என்றும் அழைக்கப்படும் இந்த நிகழ்வு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.  இந்த ஆண்டுக்கான 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் நேற்று தொடங்கியது. இதில் 10க்கும் மேற்பட்ட அரங்குகளில் 40 க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

Advertisement

இந்த நிலையில் விழாவின் இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலியா நாட்டுடன் இணைந்து இந்தியா தயாரித்துள்ள ’த மெல்பர்ன்’ என்ற ஆந்தாலாஜி திரைப்படம் திரையிடப்பட்டது. இதில் நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன. அதில்  “சிதாரா” என்ற  ஒரு கதையானது ஆப்கானிஸ்தானின் மகளிர் கிரிகெட் வீரரான சிதாராவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் கபீர்கான் இயக்கியுள்ளார்.

அடிப்படையில் ஒரு கிரிக்கெட் வீரரான சிதாரா தாலிபான்களிலிடம் இருந்து தப்பி ஆஸ்திரேலிவில் தஞ்சம் அடைகிறார் . அங்கு அவரின் கிரிக்கெட் திறமையை அடையாளம் கண்டுகொண்ட ஆஸ்திரேலியா அவரை கிரிக்கெட் வீரராக உருவாக்குகிறது. ஆப்கானில் அனுபவித்த துயர பதிவுகள், சமூக ரீதியான கட்டுபாடுகளை கடந்து சிதாரா எப்படி வெற்றிகரமான கிரிக்கெட் வீரராகிறார் என்ற உண்மைக்கதையை இது பேசுகிறது. இக்குறும்படத்தை  திரையில் பார்த்த ரசிகர்கள் படத்தின் நிறைவின் போது கைத்தட்டி ஆராவரமுடன் நெகிழ்ச்சியை தெரிவித்தனர். தொடர்ந்து இப்படத்திற்கான கதையை தேர்ந்தெடுத்த விதத்தை தயாரிப்பாளர் மிட்டா பவுனிக் மற்றும் இயக்குனர் கபீர்கான் ஆகியோர் பகிர்ந்துகொண்டனர்.

நேற்று தொடங்கிய 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Tags :
Advertisement