For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சாம் பிட்ரோடாவின் கருத்தை விமர்சித்த மோடி! மல்லிகார்ஜுன கார்கே பதிலடி!

04:07 PM Apr 24, 2024 IST | Web Editor
சாம் பிட்ரோடாவின் கருத்தை விமர்சித்த மோடி  மல்லிகார்ஜுன கார்கே பதிலடி
Advertisement

சாம் பிட்ரோடாவின் கருத்து குறித்து பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்த நிலையில் வாக்குகளுக்காக,  அவர் இந்த விளையாட்டுகளை எல்லாம் விளையாடுகிறார் என மல்லிகார்ஜுன கார்கே பதில் அளித்துள்ளார். 

Advertisement

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவரான பிட்ரோடா,  தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அமெரிக்காவில் பரம்பரை சொத்துக்கு வரி உள்ளது.  ஒருவரிடம் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து இருந்தால்,  அவர் இறக்கும்போது அவர் 45% மட்டுமே தனது வாரிசுகளுக்கு மாற்ற முடியும்.  55 சதவீதம் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.  இது ஒரு சுவாரஸ்யமான சட்டம்.  நீங்கள் ஈட்டும் செல்வத்தை பொதுமக்களுக்காக விட்டுவிட வேண்டும்.  அனைத்தையும் அல்ல.  உங்கள் செல்வத்தில் பாதியை.  இது எனக்கு நியாயமாகத் தெரிகிறது.

இந்தியாவில் இதுபோன்ற சட்டம் இல்லை.  10 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டுள்ள ஒருவர் இறந்துவிட்டால்,  அவருடைய பிள்ளைகளுக்கு 10 பில்லியன் டாலரும் கிடைத்துவிடும்.  பொதுமக்களுக்கு எதுவும் கிடைக்காது.  எனவே, இதுபோன்ற விஷயங்கள் குறித்து மக்கள் விவாதிக்க வேண்டும்.  விவாதத்தின் முடிவில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.  இதனை ஒரு புதிய கொள்கையாக,  புதிய திட்டமாக பார்க்கிறோம்.  இதில் அடங்கியிருப்பது,  மக்களின் நலன்மட்டுமே;  பெரும் பணக்காரர்களின் நலன் அல்ல" என்று கூறி இருந்தார்.

சாம் பிட்ரோடாவின் இந்த கருத்து குறித்து,  சத்தீஷ்கார் மாநிலம் சுர்குஜா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.  அதில், "இளவரசர் மற்றும் அரச குடும்பத்தின் ஆலோசகர் (சாம் பிட்ரோடா), நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.  பரம்பரை வரி விதிக்கப்போவதாக காங்கிரஸ் கூறுகிறது.  பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட பரம்பரை சொத்து மீதும் வரி விதிக்கும்.  நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள்,  காங்கிரஸ் பறித்துவிடும்.  எல்.ஐ.சி.யின் 'வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும்' என்ற முழக்கத்தைப் போன்று,  மக்களிடம் வாழும்போதும் இறந்தபின்னரும் கொள்ளையடிக்க காங்கிரசிடம் ஒரு மந்திரம் உள்ளது,  என்றும் மோடி விமர்சனம் செய்தார்.

இந்நிலையில்,  சாம் பிட்ரோடாவின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து எனவும்,  அது காங்கிரஸின் கருத்து இல்லை எனவும் அக்கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில்,  கேரளாவிற்கு பரப்புரைக்காக சென்ற,  காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பாஜகவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

பரம்பரை வரி விதிக்கும் எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை.  ஏன் பிரதமர் மோடியின் குறிக்கோள்களை எங்களது எண்ணம் என்று கூறுகிறீர்கள்.  வெறும் வாக்குகளுக்காக,  அவர் இந்த விளையாட்டுகளை எல்லாம் விளையாடுகிறார்.

இவ்வாறு மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார்.

Tags :
Advertisement