For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு!

03:33 PM Dec 06, 2023 IST | Web Editor
சென்னையில் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள்   பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு
Advertisement

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னையை முழுவதுமாக புரட்டிப் போட்டு விட்டு கடந்திருக்கிறது மிக்ஜாம் புயல். சென்னையின் பல பகுதிகளில் இன்னும் மழைநீர் முற்றிலும் வடியாத நிலையில்,  திரும்புகிற இடங்களில் எல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி பகுதிக்கு இன்று நேரில் சென்றார்.  அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

"மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.  அடிப்படை தேவையாக தண்ணீர் தான் மக்களுக்கு தேவைப்படுகிறது.  கிட்டத்தட்ட 70% சென்னையில் தேங்கிய மழை நீர் வடிந்துவிட்டது.  இன்னும் 30% தான் மழை நீர் தேங்கியுள்ளது.

எங்கு எல்லாம் தண்ணீர் தேங்கி உள்ளதோ அந்த பகுதிக்கு மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டித்து வைத்துள்ளார்கள்.  இந்த நேரத்தில் மக்கள் தைரியமாக இருக்க வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சியினால் முடிந்த அளவுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறோம்.  சென்னைக்கு அருகில் இருந்து கொண்டு வந்த படகுகள் மூலம் மக்களுக்கு உதவி செய்து வருகிறோம்" என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: மிக்ஜாம் புயல் – சில பகுதிகளில் வடியாத வெள்ள நீர்…தவிக்கும் பொதுமக்கள்!

மேலும் பேசிய அவர் "நாளைக்கு ஒரு 10% தவிர்த்து சென்னை இந்த நிலைமையிலிருந்து மீண்டு விடும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது.  இந்த நேரத்தில் அரசியல் பேச விரும்பவில்லை.  ஆனால், கண்டிப்பாக இது முடிந்த பிறகு இதை பற்றி பேசுவோம்.  உலக அளவில் இருக்கக் கூடியவர்கள் இங்கு வந்து தொழில் செய்ய நினைக்கும் போது, சென்னை இவ்வாறு இருப்பது சென்னைக்கும்,  தமிழ்நாட்டிற்கும் ஒரு பின்னடைவாக தான் இருக்கும். கடந்து 3 நாட்களாக தொண்டர்கள் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  அரசு அதிகாரிகளுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

மேலும் "கடந்த 4 நாட்களாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  அவர்களை எந்த ஒரு குற்றமும், குறையும் சொல்ல இயலாத நிலையில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு அதிகாரிகளும் முன் களப்பணிகளும் தொடர்ந்து களத்தில் இருக்கிறார்கள்.  நாங்களும் அவர்களுடன் இருக்கிறோம்.  மக்கள் வேறொரு மனநிலையில் உள்ளார்கள் தொடர்ந்து அவர்களை வருடா வருடம் சமாதானப்படுத்த முடியாது.  மக்களுக்கு அடிப்படையான தீர்வு மற்றும் அடிப்படை வசதிகள் அமைத்து தர வேண்டும்.  இந்தப் பகுதியில் எல்லாம் 40 ஆண்டுகளாக வெள்ளம் வராத பகுதி, 2015-ல் மோடி ஆட்சியின் போது அம்ருத் என்ற திட்டத்தை நாம் கொண்டு வந்தோம்.  இந்த அம்ருத் திட்டத்தின் மூலம் சுமார் 4000-க்கும் மேற்பட்ட கோடிகளை நாம் கொடுத்துள்ளோம்" என்றார்.

தொடர்ந்து "தண்ணீரே வராத பகுதிக்கு தண்ணீர் வருகிறது என்றால் அடிப்படை தேவை என்ன ஆனது என்று மக்கள் கேட்கிறார்கள்.  இருந்தாலும் அரசு அதிகாரிகள் முடிந்த அளவிற்கு அனைத்து பகுதிகளுக்கும் வந்து தண்ணீரை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  சென்னை மக்கள் அதிகாரிகளை நம்புகிறார்கள் ஆனால் அரசியல்வாதிகளை நம்ப தயாராக இல்லை.  எனவே அரசியல்வாதிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் திட்டங்களை சரியான முறையில் கொண்டு வர வேண்டும்.  கரப்ஷன் இல்லாத திட்டங்களை கொண்டு வர வேண்டும்" என தெரிவித்தார்.

Tags :
Advertisement