For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"எம்ஜிஆர் தலைசிறந்த தேசியவாதி" - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம்!

உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, தமிழைப் பெருமைப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
10:47 AM Jan 17, 2025 IST | Web Editor
 எம்ஜிஆர் தலைசிறந்த தேசியவாதி    பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம்
Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சர் பதவி வகித்து பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டவர் எம்ஜிஆர். அதேபோல் தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சத்தில் இருந்து பல்வேறு சிறந்த பொழுதுபோக்கு படங்களிலும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அமைச்சர்கள், அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், "தமிழக முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா அமரர் எம்ஜிஆர் பிறந்த தினம் இன்று. விளிம்புநிலை மக்களை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தியவர். சுகாதாரம், தொழில் பயிற்சி திட்டங்கள், சுய வேலைவாய்ப்பு திட்டங்கள், கல்வி உட்கட்டமைப்பு, மகளிர் மேம்பாடு, பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவு என ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் மேம்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியவர்.

உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, தமிழைப் பெருமைப்படுத்தியவர். சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த தலைசிறந்த தேசியவாதியான டாக்டர் எம்.ஜி.ஆர் புகழைப் போற்றி வணங்குகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement