"விஜய் குறித்து ஊடகங்கள் பெரிதாக்குகின்றனர்"...."6 நொடியில் கூட அரசியலில் மாற்றம் வரும்" - டிடிவி தினகரன் பேட்டி!
அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிவகங்கை சட்டமன்றத்திற்கு உட்பட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,
"ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்திப்பது பற்றி கூறுவது சரியாக இருக்காது. அதிமுக பிரிந்து சென்றதால் கடந்த முறை திமுக வெற்றி பெற்றது. அமித்ஷாவின் முயற்சியால் அதிமுக ஒன்று இருப்பது மேலும் புதிய கட்சியிரையும் ஒன்றினைக்கும் முயற்சி திமுகவை வீழ்த்துவதற்காக தான். பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்ற பின் தான் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என தெரியவரும். 6 நொடியில் கூட அரசியலில் மாற்றம் வரும். 2026 ஜனவரியில் கூட்டணி நிலைபாடுகள் தெரியும்.
விஜய் குறித்து ஊடகங்கள் பெரிதாக்குகின்றனர். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றினைக்கும் பணியில் அமித்ஷா ஈடுபட்டு வருகிறார். சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறை சுதந்திரமாக செயல்பட இயலவில்லை. கூலி படைகள் அதிகமாகி விட்டனர்.
முதல்வருக்கும், அவரது குடும்பத்தினர் மட்டுமே பாதுகாப்பாக உள்ளனர். சுதந்திரத்திற்கு பிறகு மோசமான ஆட்சி தற்போது நடைபெறுகிறது. நாடோடி போல் ஊர் சுற்றுகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆட்சியில் ஒரு சில திட்டங்கள பயனுள்ளதாக உள்ளது. ஆனால் 4 அரை ஆட்சி மக்களுக்கு 7 அரை ஆட்சியாக தான் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.