"வணிகம் பெருகட்டும்.. தமிழ்நாடு வளம் பெறட்டும்" - வணிகர் தினத்தையொட்டி இபிஎஸ் வாழ்த்து!
ஆண்டுதோறும் மே 5ம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மே 5) வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு செங்கல்பட்டை அடுத்த மதுராந்தகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொள்கிறார்.
மேலும், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மறைமலைநகரில் இன்று நடைபெறுகிறது. கொளத்தூர் த.ரவி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இதேபோல், பல்வேறு வணிகர் சங்கங்கள் சார்பிலும் வணிகர் தின மாநாடுகள் நடக்கின்றன.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வணிகர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"தமிழ்நாட்டின் வர்த்தக வளத்தை தங்கள் கடின உழைப்பாலும், நேர்மைமிகு வியாபாரத்தாலும் உயர்த்திப் பிடிக்கும் அன்பிற்கினிய வணிகப் பெருமக்கள் அனைவருக்கும் எனது "வணிகர் தின" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வணிகம் பெருகட்டும்!
தமிழ்நாடு வளம் பெறட்டும்!"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.