கவுண்டமணியின் மனைவி மறைவுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல்!
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான கவுண்டமணி, தனது அசத்தலான காமெடி டயலாக் டெலிவரி மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தற்போது ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில் இன்று(மே.05) அவரது மனைவி சாந்தி (வயது.67) உடல்நலக்குறைவால் காலமானார். இது திரையுலகைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் கவுண்டமணி மனைவியின் மறைவுக்குக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சாந்தியின் உடல் அஞ்சலிக்காக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அங்கு அவரது திரையுலக நண்பர்களான செந்தில், சத்தியராஜ், உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய், கவுண்டமணியின் மனைவி மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.