வயநாட்டில் துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் - தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தல்... களத்தில் பிரத்யேக தகவல்களுடன் நியூஸ்7 தமிழ்!
மக்களவைத் தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வயநாடு தொகுதியில் பொதுமக்களை சந்தித்த மாவோயிஸ்டுகள் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்து சென்றுள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அதில், முதற்கட்டமாக கடந்த 19-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், நாளை (ஏப். 26) பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 13 மாநிலங்களைச் சேர்ந்த 89 தொகுதிகளில் இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் 20 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5 மணிக்கு மேல் வெளிநபர்கள் தொகுதியில் தங்க அனுமதி அளிக்கப்படாது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தயார் செய்துள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் களத்தில் உள்ளனர். ஸ்டார் தொகுதியாக உள்ள வயநாடு தொகுதிக்குட்பட்ட தேயிலைத் தொட்ட பகுதிகளில் இன்று காலை மாவோயிஸ்டுகள் பொதுமக்களை சந்தித்துள்ளனர். சுமார் 4 பேர்கொண்ட குழுவினர் துப்பாக்கியுடன் வந்துள்ளனர்.
அப்போது தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என பொதுமக்களே கேட்டுக் கொண்டுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கான எந்த வித அடிப்படை வசதிகளும் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர். எனவே தேர்தலில் வாக்களிக்க கூடாது, தேர்தலை புறக்கணியுங்கள் என கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த வீடியோ கட்சியை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்ற நிலையில் மாவோயிஸ்டுகள் வந்து சென்ற பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவில் துப்பாக்கியுடன் வெளியான உருவம் யார் என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.