For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சுற்றுசூழல் அனுமதிக்கு முன்னரே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளதா?

07:16 PM Apr 18, 2024 IST | Web Editor
சுற்றுசூழல் அனுமதிக்கு முன்னரே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளதா
Advertisement

சுற்றுசூழல் அனுமதிக்கு முன்னரே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி சர்ச்சையை எழுப்பியுள்ளது.

Advertisement

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006ன் கீழ், மதுரை எய்ம்ஸ் கட்டுமானமானத்திற்கு மாநில அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியமாகும். இந்த அனுமதியை பெறுவதற்கு, இம்மருத்துவமனையின் கட்டுமானத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு (EIA) மேற்கொள்வது அவசியமாகும். இந்த பணியை மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை (TOR) வழங்குமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதியன்று விண்ணப்பம் செய்தது.

இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை நேற்றுதான் தமிழ்நாடு அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளது.

இதன்பின்னர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு செய்து அதனை மீண்டும் மாநில அரசிடம் சமர்ப்பித்த பின்னரே, மருத்துவமனை கட்டுமானத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற முடியும். சுற்றுச்சூழல் அனுமதி பெறும் வரை திட்ட அமைவிடத்தில் வேலி மற்றும் பாதுகாவலர் அமர கூரை மட்டுமே அமைக்க முடியும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006ன் படி வேறு எந்த கட்டுமானப் பணிகளை எழுப்பினாலும், அது சட்டவிரோதம் என மத்திய அரசின் அலுவல் உத்தரவு தெரிவிக்கிறது.

இதன்படி மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தற்போது மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகள் அனைத்தும் சட்ட விதிமீறலாகும். சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்னரே கட்டுமானப் பணிகளைத் தொடங்கியதன் மூலம் மக்களவைத் தேர்தலுக்காக சுற்றுச்சூழல் விதிகளை மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் மீறியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags :
Advertisement