Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஹரியானா தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” - #RahulGandhi பதிவு!

02:43 PM Oct 09, 2024 IST | Web Editor
Advertisement

ஹரியானாவில் காங். எதிர்பாராத முடிவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், பல தொகுதிகளில் இருந்து வரும் புகார்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க உள்ளதாகவும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (அக்.08) நடைபெற்றது. இதில் ஹரியானாவில் தனி பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக தொடர்ந்து அந்த மாநிலத்தில் 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. நயாப் சிங் சைனி மீண்டும் முதலமைச்சர் ஆவார் என கூறப்படுகிறது. அதேபோல ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. உமர் அப்துல்லா அம்மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றி என்பது இந்திய அரசியலமைப்புக்கும், ஜனநாயக சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி. ஹரியானா மாநிலத்தில் கிடைத்த எதிர்பாராத முடிவுகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். பல தொகுதிகளில் இருந்து வரும் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க உள்ளோம்.

எங்களுக்கு ஆதரவு அளித்த ஹரியானா மக்களுக்கும், அயராத கடின உழைப்பை வழங்கிய எங்கள் சிங்கத் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றி. உரிமைகளுக்காகவும், சமூக மற்றும் பொருளாதார நீதிக்காகவும், உண்மைக்காகவும் இந்தப் போராட்டத்தைத் தொடர்வோம். உங்கள் குரலை தொடர்ந்து உயர்த்துவோம்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags :
assembly electionsBJPCongressharyanaHaryana electionsINCIndiajammu kashmirJKNCndaNews7TamilResults
Advertisement
Next Article