For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவை தேர்தல் 2024: பாஜக, காங்கிரஸ் கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? | சர்வே ரிப்போர்ட்!...

07:13 AM Mar 06, 2024 IST | Web Editor
மக்களவை தேர்தல் 2024  பாஜக  காங்கிரஸ் கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்    சர்வே ரிப்போர்ட்
Advertisement

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 378 இடங்கள் வரை கிடைக்கும் என இந்தியா டிவி  CNX கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. 

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும்,  காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணியும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.  இந்த நிலையில்,  தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளையும் சில நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில்,  இந்தியா TV CNX என்ற நிறுவனம் தனது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இது வெறும் பொதுமக்களின் கருத்து மட்டுமே, தேர்தலுக்குப் பிறகுதான் உண்மையான முடிவு தெரியவரும். மத்தியப் பிரதேசத்தின் 29 மக்களவைத் தொகுதிகளுக்கும் என்ன நடக்கும்? உண்மையில் பாஜக கூட்டணி 370 இடங்களில் வெற்றி பெறுமா? தேசிய ஜனநாயக கூட்டணியின் எண்ணிக்கை 400ஐ தாண்டுமா? வடமாநிலங்களில் பாஜக பெரும்பான்மையைப் பெற்றால் தெற்கிலும் பாஜக அலை எழுமா? இப்படி பல கேள்விகள் மக்கள் மனதில் நிலவி வருகிறது.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 543 மக்களவைத் தொகுதிகளில் 378 இடங்களைக் கைப்பற்றினால்,  நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகலாம் என்று இந்தியா டி.வி. சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பிப்ரவரி 5 முதல் 23 வரை 543 மக்களவைத் தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியதாக இந்தியா டிவி CNX அறிவித்துள்ளது.  இதில் 1,62,900 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 84,350 பேர் ஆண்கள்,  78,550 பேர் பெண்கள்.

தெற்கில் குறைந்த வெற்றிகளைப் பெறும் அதே வேளையில்,  பாஜக இந்தி இதயப் பகுதியில் உள்ள பல மாநிலங்களில் பெறிய அளவில் வெற்றியை பதிவு செய்யும்  என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பாஜக 74 இடங்களை வென்று,  2014 இல் அதன் 71 இடங்களை பெற்ற கணக்கை மிஞ்சும் என்றும்,  NDA கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரிய லோக் தளம் (RLD) மற்றும் அப்னா தளம், தலா இரண்டு இடங்களைப் பெறலாம் என்றும் மீதமுள்ள இரண்டில் மட்டும் அகிலேஷ் யாதவ் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரு மற்றும் இந்திரா காந்தி காலத்தில் உ.பி.யில் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் இந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்புகளும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ஒன்றும் இல்லை என்று கணித்துள்ளது.

கருத்துக் கணிப்புகளின்படி,  மத்தியப் பிரதேசத்தில் பாஜக வெற்றிபெறக்கூடும். மாநிலத்தில் மொத்தமுள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் 29-ஐ பாஜக கைப்பற்றும். ம.பி.யில் காங்கிரஸ் கட்ச்சிக்கு கடினம்.  கமல்நாத்தின் கோட்டையான சிந்த்வாராவில் கூட காங்கிரஸின் ஆதரவு தளம் சரிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கமல்நாத்தின் மகன் நகுல்நாத் போட்டியிட்டால் கூட அவருக்கு தோல்விதான் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பின்படி, கணிப்புகளின்படி, குஜராத்தில் 26 இடங்களிலும்,  மத்தியப் பிரதேசத்தில் 29 இடங்களிலும்,  ராஜஸ்தானில் 25 இடங்களிலும்,  ஹரியானாவில் அனைத்து 10 இடங்களிலும் பாஜக வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  டெல்லியில் 7 இடங்களும், உத்தரகண்டில் 5 இடங்களும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 4 இடங்களும். பீகாரில் 17 இடங்களும்,  ஜார்க்கண்டில் உள்ள 14 இடங்களில் 12 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 48 தொகுதிகளில் 25 இடங்களிலும்,  ஒடிசாவில் 21 இடங்களில் 10 இடங்களிலும்,  அசாமில் 14 இடங்களில் 10 இடங்களிலும் பாஜக வெற்றி பெறலாம் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜியின் கோட்டையான மேற்கு வங்கத்தில் பாஜக கட்சி 42 இடங்களில் 20 இடங்களில் வெற்றி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கர்நாடகாவில் 28 இடங்களில் 22 இடங்கள் பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் என்றும் கேரளாவில் 3 இடங்களிலும்,  தமிழ்நாட்டில் 4 இடங்களிலும்,  தெலங்கானாவில் 5 இடங்களிலும் பாஜக  கூட்டணி வெற்றி பெறலாம் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement