For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யார்?

01:02 PM Jun 05, 2024 IST | Web Editor
நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யார்
Advertisement

மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்து இங்கே காணலாம்....  

Advertisement

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.  இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 292 இடங்களும்,  இந்தியா கூட்டணிக்கு 234 இடங்களும் கிடைத்தன. இந்த தேர்தலில் இந்திய கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடும் போட்டியை கொடுத்துள்ளது.  இதற்கிடையில்,  பல வேட்பாளர்கள் அதிக சாதனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

1) ரகிபுல் உசேன் (காங்கிரஸ்)

அசாமின் துப்ரி தொகுதியில் காங்கிரஸின் ரகிபுல் உசேன் 14,71,885 வாக்குகள் பெற்று நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றார்.  இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட  அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் முஹமது பத்ருதீன் அஜ்மலை விட 10.12 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

2) சங்கர் லால்வானி:(பாஜக)

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் தேர்தலில் போட்டியிடவில்லை.  இதையடுத்து பாஜக சார்பில் போட்டியிட்ட சங்கர் லால்வானி 12,26,751 வாக்குகள் பெற்றார்.  லால்வானியின் போட்டியாளரான பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சஞ்சய் சோலங்கி 51,659 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன் மூலம் சங்கர் லால்வானி 10.08 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பட்டியலில் 2-ம் இடத்தைப் பிடித்தார்.

3)சிவராஜ் சிங் சவுகான்: (பாஜக)

மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சிவராஜ் சிங் சவுகான்,  விதிஷா மக்களவைத் தொகுதியில் 8,21,408 வாக்குகள் வித்தியாசத்தில் தனது போட்டியாளரும் காங்கிரஸ் வேட்பாளருமான பிரதாப் பானு சர்மாவை தோற்கடித்தார்.  சவுகான் 11,16,460 வாக்குகளும்,  காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் பானு சர்மா 2,95,052 வாக்குகளும் பெற்றனர்.

4)விஷ்ணு தத் சர்மா: (பாஜக)

மத்திய பிரதேச பாஜக தலைவர் விஷ்ணு தத் சர்மா 5,41,229 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  அவர் பகுஜம் சமாஜ் கட்சியின் கமலேஷ் குமாரை தோற்கடித்துள்ளார்.  வி.டி.சர்மா தொடக்கம் முதலே முன்னிலையை தக்கவைத்து வெற்றியாக மாற்றினார்.

5)ஜோதிராதித்ய சிந்தியா : (பாஜக)

மத்தியப் பிரதேசம் மாநிலம் குணா-சிவ்புரி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ஜோதிராதித்ய சிந்தியா,  காங்கிரஸ் வேட்பாளரை சுமார் ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மீண்டும் பாஜகவின் பிடியைத் தக்க வைத்துக் கொண்டார்.  சிந்தியா 9 லட்சத்து 23 ஆயிரத்து 302 வாக்குகள் பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  அவரை எதிர்த்து போட்டியிட்ட யாதவேந்திர ராவ் தேஷ்ராஜ் சிங் 3 லட்சத்து 82 ஆயிரத்து 373 வாக்குகள் பெற்றார்.

Tags :
Advertisement