தமிழக பாஜக சார்பில் மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைப்பு!
தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு செய்து வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோருடன் தொகுதி உடன்பாட்டை முடித்துவிட்டது. மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதே நேரத்தில் அதிமுகவும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சிறிய கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி அமைக்க பாஜக முடிவு செய்துள்ளது. அதற்காக ஏற்பாடுகளை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசணை நடத்த பாஜக சார்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் J.P. நட்டா அனுமதியுடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திடவும், ஒருங்கிணைத்திடவும் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது.
மாநில அளவில் குழு:
1. எல்.முருகன் - மத்திய இணை அமைச்சர்
2. அரவிந்த் மேனன் -தேசிய செயலாளர் - தமிழக தேர்தல் பொறுப்பாளர்
3. P.சுதாகர் ரெட்டி -தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர்
4. நயினார் நாகேந்திரன் -சட்டமன்ற குழு தலைவர் பாஜக
5. பொன்.ராதாகிருஷ்ணன் -தேசிய செயற்குழு உறுப்பினர்
6. H.ராஜா -தேசிய செயற்குழு உறுப்பினர்
7. வானதி ஸ்ரீனிவாசன் எம்எல்ஏ -தேசிய தலைவர், மகளிர் அணி