For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எல்.கே.அத்வானி பிறந்தநாள் - பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
09:01 PM Nov 08, 2025 IST | Web Editor
பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
எல் கே அத்வானி பிறந்தநாள்   பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
Advertisement

பாஜகவின் மூத்த தலைவர்களில் எல். கே. அத்வானி குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர். பல்வேறு யாத்திரைகளை நடத்தி, பாரதிய ஜனதா கட்சியினை ஆட்சிப் பொறுப்பிற்கு கொண்டுவந்த பெருமை இவரையே சாரும். அதேசமயம், இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பான “ஆர்.எஸ்.எஸ்”-இன் தீவர கொள்கையாளர் ஆவார்.

Advertisement

இவர் வாஜ்பாய் பிரதமராக இருந்த 2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணியாற்றியுள்ளயார். 1977 முதல் 1979 வரை இந்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும், 1966, 1998-1999, 1999-2004ம் ஆண்டுகளில் இந்திய உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இந்தியாவில் பாஜக தற்போது அதீத வளர்ச்சியடைந்துள்ளது. பாஜகவின் இந்த வளர்ச்சிக்கு வித்திட்டவர் எல்.கே.அத்வானி ஆவார்.

இதற்கிடையே, எல்.கே.அத்வானி இன்று தனது 98வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், எல்.கே.அத்வானியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement