“மீண்டும் சொல்கிறேன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவவாதி” - அண்ணாமலை பேட்டி!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவவாதி என
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் பாஜக உயர் நிலை குழு கூட்டம், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து, கூட்டம் நிறைவடைந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :
"இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை, 486 தொகுதிகளில் 6 கட்டங்களாக தேர்தல் முடிந்துள்ளது. இதில் கடைசி கட்ட தேர்தல் முடிவில் பாஜக 370 தொகுதிகளில் வெற்றி பெறும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும். பாஜக பற்றி பேச நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு போதுமான அரசியல் அனுபவம் இல்லை. திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் கருத்துரிமையை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. திமுகவைப் போல நாங்கள் நள்ளிரவில் யாரையும் கைது செய்ய மாட்டோம்.
இதையும் படியுங்கள் : ‘மே 31ம் தேதி ஆஜராகிறேன்’ – ஆபாச வீடியோ வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டு பேச்சு!
மீண்டும் சொல்கிறேன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாதி. இந்துத்துவா என்பது ஒரு மதம் சார்ந்து கிடையாது.இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவினருடன் விவாதிக்க தயார். இந்துத்துவா என்பது இப்போது திரித்து சொல்லபடுகிறது. இந்துத்துவா என்ன வென்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதா இருந்து இருந்தால் முதல் ஆளாக ராமர் கோயிலுக்கு சென்றிருப்பார்"
இவ்வாறு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.