"அதிமுக முதலில் திருநெல்வேலியில் ஜெயிக்கட்டும்" - அமைச்சர் மனோ தங்கராஜ்!
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மணலி சந்திப்பில் இருந்து குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழக பால்வளத்துறை அமைச்சரருமான மனோ தங்கராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுகவினர் தக்கலை அண்ணா சிலை நோக்கி மௌன ஊர்வலம் நடத்தினர். அதை தொடர்ந்து அண்ணாசிலை சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த கலைஞரின் படத்திற்கு மலை பேதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளிடம் பேசுகையில்,
"காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுலை நீதிபதி இந்தியரா என கேட்ட விஷயத்தை பொறுத்தவரையில் அதை பார்த்தவரின் கண்ணில் பிரச்சனையா இல்லை பதில் சொல்ல வேண்டிய ஆளின் கடமையா என தெரியவில்லை. இதை ஆங்கிலத்தில் பியூட்டி லைவ்ஸ் ஐ ஆப்தெ டிஸ்கோல்டர் என கூறுவார்கள். நீதிபதிகள் வரம்பு மீறி செல்கின்றார்களா என்பதை பெறுத்தவரையில் பிரி கன்சியூ மாஸ் என கூறுவார்கள் இது ஒரு நீதிபதிக்கு இருக்ககூடாது
200 தொகுகளில் அதிமுக வெல்லும் என நாயினார் நாகேந்திரன் கூறியதை பொருத்தவரை, அவர் முதலில் திருநெல்வேலியில் ஜெயிக்கட்டும். கீழடி, மேலடியை விட்டு விட்டு ஸ்டாலின் மக்கள் பிரச்சனையை கவனிக்கட்டும் என நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது தமிழர்களை கொல்வது, தமிழகர்களின் பாரம்பரியத்தை கொல்வது, இந்திய துனைகண்டத்தில் வாழ்ந்த பூர்வகுடி மக்களின் பண்பாட்டு வரலாற்றை அழித்த அந்த மனுசுருதியை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பின்னால் நயினார் நகேந்திரன் வால்பிடித்து கொண்டிருக்கிறார்.
மனுசுருதி என்பது தமிழை மட்டுமல்ல சமத்துவமாக வாழ்கின்ற சமத்துவம் என்ற கோட்பாட்டை ஒழிப்பதுதான் அவர்களின் நோக்கம். இதிலிருந்து ஜாதி பெருமைபற்றி அவர் பேசி கொண்டிருக்கிறார். அவர் மனுசுருதியை ஏற்றுகொண்டிருக்கிறார். ஜாதி பெருமைபற்றி பல்வேறு விஷயங்கள் பற்றி பேசி கொண்டிருக்கிறார். எச்.ராஜா சினிமால் நடிப்பதை பொருத்தவரையில் அங்கேயும் போய் இதுமாதிரி பேசினால் கஷ்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.