For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராஜஸ்தான் கரண்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் - தோல்வியை தழுவிய அமைச்சர்!

02:04 PM Jan 08, 2024 IST | Web Editor
ராஜஸ்தான் கரண்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல்   தோல்வியை தழுவிய அமைச்சர்
Advertisement

ராஜஸ்தானில் கரண்பூர் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தலில் அமைச்சர் சுரேந்திர பால் சிங் தோல்வி அடைந்தார்.

Advertisement

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக நவம்பர் 25-ம் தேதியும், டிசம்பர் 3-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், கரண்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் உயிரிழந்ததால் அப்பகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில், ராஜஸ்தானின் கரண்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜனவரி 5 அன்று நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : “கேப்டனுக்கு செய்ய வேண்டிய மரியாதையை நிச்சயம் நடிகர் சங்கம் செய்யும்” – நடிகர் சூரி

ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா தலைமையிலான அமைச்சரவையில் கடந்த மாதம் 30ம் தேதி இணை அமைச்சராக பதவியேற்ற சுரேந்தர் பால் சிங் பாஜ வேட்பாளராக போட்டியிட்டார்.  காங்கிரஸ் தரப்பில் குர்மீத் சிங்கின் மகன் ரூபிந்தர் சிங் நிறுத்தப்பட்டார்.  இந்நிலையில் அப்பகுதியில் 81.38 சதவீத வாக்குகள் பதிவானது. 

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்திர சிங்கை காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் 12,750-வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தோல்வியால் ராஜஸ்தான் அமைச்சர் பதவியை சுரேந்திர பால் சிங் இழந்துள்ளார்.

Tags :
Advertisement