For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா"- பிரதமர் மோடி புகழாரம்!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
05:15 PM Feb 24, 2025 IST | Web Editor
 தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா   பிரதமர் மோடி புகழாரம்
Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று (பிப்.24)  கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள், ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதே போல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

Advertisement

மேலும், அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் ஜெயலலிதா குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த இரக்கமுள்ள தலைவரும் சிறந்த நிர்வாகியுமான ஜெயலலிதா அவர்களை, அவரது பிறந்தநாளில் நினைவுகூர்கிறேன். எண்ணற்ற சந்தர்ப்பங்களில் அவருடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது, எனது பாக்கியம். மக்களுக்கான செயல்பாடுகளில் அவர் எப்போதுமே மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பார்"

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement