For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘‘அதிமுக முடிந்துவிடவில்லை, என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது’’ - ஆதரவாளர்களை சந்தித்த பின் சசிகலா பேட்டி!

08:22 PM Jun 16, 2024 IST | Web Editor
‘‘அதிமுக முடிந்துவிடவில்லை  என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது’’   ஆதரவாளர்களை சந்தித்த பின் சசிகலா பேட்டி
Advertisement

‘‘அதிமுக முடிந்துவிடவில்லை, என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது’’  என்று சசிகலா கூறியுள்ளார்.

Advertisement

சசிகலா சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் தனது ஆதர்வாளர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சசிகலா கூறியதாவது:

அதிமுக ஏழை மக்களுக்கான இயக்கம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் பல துன்பங்களை அனுபவித்து இந்த இயக்கத்தை ஒன்றிணைத்து இந்தியாவிலேயே 3வது பெரிய இயக்கமாக இருந்தது. அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தது சரியல்ல.

அதிமுக தற்போது சரிவுகளை சந்தித்து வருகிறது. ஒரு சில சுயநலவாதிகள் தான் இதற்கு காரணம். இவை அனைத்தையும் நான் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தேன். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று எம்ஜிஆர் அடிக்கடி என்னிடம் சொல்லியிருக்கிறார்.

எனக்கென்று சொந்த ஊர், சொந்த சாதி கிடையாது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சாதி பார்த்தது கிடையாது. இப்போது அதிமுகவில் இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதி அரசியலுக்குள் செல்கிறார்கள். சாதி அரசியல் செய்ய வேண்டும் என்றால் தனியாக சாதி அமைப்புகள் தொடங்கலாம்.

இதையும் படியுங்கள் : “பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை ஒத்திவைப்பு!” – பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன்!

ஆனால் எம்ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தில் சாதி அரசியல் செய்வதை யாரும் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். நான் சாதி பார்த்திருந்தால் பெங்களூரு சிறைக்கு செல்லும் போது எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் முதலமைச்சர் பதவியை கொடுத்திருக்க வேண்டும். மேற்கு மாவட்ட மக்கள் எம்ஜிஆருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தனர். அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தான் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தேன்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கும், நான்காவது இடத்திற்கும் சென்றுள்ளது. டெபாசிட் இழந்துள்ளது. அதிமுக முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். நான் அரசியலுக்கு வந்துவிட்டேன். என் பின்னால் அதிமுக தொண்டர்களும் தமிழ்நாடு மக்களும் இருக்கிறார்கள். நிச்சயமாக 2026ம் ஆண்டு தனிப்பெரும் கட்சியாக அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும்.

தமிழ்நாடு முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். திமுகவின் கோரப்பிடியில் இருந்து தமிழ்நாடு மக்களை காக்க வேண்டும் என்றால் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும்"

இவ்வாறு சசிகலா தெரிவித்தார்.

Tags :
Advertisement