For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஜெயலலிதா ஆன்மீகவாதிதான்... மதவெறி பிடித்தவர் இல்லை” - திருநாவுக்கரசர் பேச்சு!

02:33 PM May 27, 2024 IST | Web Editor
“ஜெயலலிதா ஆன்மீகவாதிதான்    மதவெறி பிடித்தவர் இல்லை”   திருநாவுக்கரசர் பேச்சு
Advertisement

“ஜெயலலிதா ஆன்மீகவாதி தான் ஆனால் மத வெறி பிடித்தவர் இல்லை.  கடவுளை
வணங்குபவர்கள் மதவாதிகள் இல்லை” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்துக்கு காங்கிரஸ் முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார். 

Advertisement

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60 ஆவது நினைவு நாளையொட்டி,  தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை
சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்ட நேருவின் படத்திற்கு மலர் தூவி
மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:

“இந்தியாவில் இன்று இருக்கும் அனைத்து வளர்ச்சி திட்டங்களுக்கும் அஸ்திவாரம்
அமைத்தவர் நேரு தான்.  நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும்.  மத்திய அரசின் அனுமதி இல்லாமல் அணைக்கட்ட முயன்றால் மத்திய அரசு, நடுவர் நீதிமன்றம்,  உச்ச நீதிமன்றம் வாயிலாக தடுத்து நிறுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டணிக்கும்,  அணை கட்டுவதற்கும் சம்மந்தம் இல்லை.  கர்நாடகாவில் முன்பு பாஜக
இருந்தது.  என்ன செய்தார்கள்? சட்டரீதியாகதான் பேச வேண்டுமே தவிர கூட்டணிரீதியாக பேச வேண்டிய விசயம் இல்லை.  இரண்டு முதலமைச்சரும் அமர்ந்து பேசும் விஷயம் இல்லை.  அனுமதி இல்லாமல் அணைகள் கட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

ஜெயலலிதா ஆன்மீகவாதி தான்.  கடவுளை வணங்குபவர். ஆனால், மத வெறி பிடித்தவர் இல்லை.  கடவுளை வணங்குபவர்கள் எல்லாம் மத வெறியர்களா? அண்ணாவும் தான், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றார்.  கலைஞரும் அதையே சொன்னார்.  மு.க.ஸ்டாலினும் அதையேதான் சொல்கிறார்.  ஆன்மீக நம்பிக்கை வேறு,  மத வெறி வேறு. கடவுளை வணங்குபவர்கள் மதவாதிகள் இல்லை.  அண்ணாமலை கருத்துக்கு அதிமுகவினர் பலர் பதில் கூறிவிட்டனர்.  என்னுடைய கருத்து இதுதான்” என்றார்.

Tags :
Advertisement