“தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஜெயலலிதாதான் நல்ல ஆட்சியை கொடுத்தார்!” - பிரதமர் மோடி புகழாரம்!
05:37 PM Feb 27, 2024 IST
|
Web Editor
ஜெயலலிதாவின் பிறந்த நாள் சமீபத்தில் முடிந்தது . இந்நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். எம் ஜி.ஆர் கொள்கைகளை பின்பற்றி ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. நாட்டின் வளர்ச்சி என்பது தமிழகத்தின் வளர்ச்சியும் கருத்தில் கொண்டு தான், அதுதான் மோடி உத்தரவாதம். ராணுவ தளவாட உற்பத்தி நிலையம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தியா கூட்டணி தமிழகத்தை கைப்பற்ற முயல்கிறார்கள். அவர்கள் கைப்பற்றிவிட்டால் வளர்ச்சி இருக்காது. பாதுகாப்பு துறையில் லஞ்சம் பெற்ற காங்கிரஸ் வளர்ச்சியை தருமா? ஜவுளி தொழிலுக்கு ஜவுளி பூங்கா திட்டத்தை அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் கோடிகணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறவுள்ளனர்.
Advertisement
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஜெயலலிதாதான் நல்ல ஆட்சியை கொடுத்தார் என திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கூறினார்.
Advertisement
‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் வந்த பிரதமர் மோடி விழா மேடையில் உரையாற்றினார்.
அப்போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:
தமிழகத்திற்கு வந்தவுடன் எம்.ஜி.ஆர் நினைவுக்கு வந்தார். அவர் பணி செய்த மண்ணில் இருப்பது மகிழ்ச்சி. அவர் எழைகளுக்கு செய்த உதவியால் இன்னும் நினைவில் இருக்கிறார். அவர் குடும்ப ஆட்சி செய்யவில்லை. அவருக்கு பிறகு தமிழகத்தில் நல்ல ஆட்சியை கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே. அதனால் தான் திமுக எம்.ஜி.ஆரை இழிவு செய்து ஆட்சி செய்து வருகிறது.
Next Article