Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அதிமுக - பாஜக கூட்டணியை உடைப்பது எங்கள் நோக்கம் அல்ல" - திருமாவளவன்!

துணை குடியரசு தலைவர் ராஜினாமா குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
12:30 PM Jul 24, 2025 IST | Web Editor
துணை குடியரசு தலைவர் ராஜினாமா குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Advertisement

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "மழைக்கால கூட்ட தொடரில் காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ள தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த்ம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

Advertisement

எஸ்.ஐ.ஆர்.வாக்காளர்கள் பட்டியலில் நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. போலி வாக்காள்ர்கள் சேர்க்கப்ப்டுகின்றனர். கிட்டத்தட்ட 50 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது பீகாரில் மட்டுமல்ல தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் நடக்க கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. இது மிக மோசமான மக்கள் விரோத நடவடிக்கை ஆகும். ஜனநாயக விரோத நடவடிக்கை. இது குறித்து தீவிரமாக விரிவாக இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அரசு எடுத்து சிந்தூர் நடவடிக்கை ஆகியவை குறித்து விரிவாக பேச வேண்டும். இந்த 2 கோரிக்கைகளை முன் நிறுத்தி இரு அவைகளிலும் கோரிக்கை எழுப்பி வருகிறோம். ஆனால் பாராளுமன்ற நிர்வாகம் உடன் பாடாததால் தினமும் வாசல்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மத்திய அரசு, நாடாளுமன்ற நிர்வாகம் இந்த கோரிக்கைகளை ஏற்க வேண்டும். விரிவாக விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

துணை குடியரசு தலைவர் திடீரென பதவி விலகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது பெரும் அரசியல் சதி என்ற அயம் எழுந்து உள்ளது. அவராக செய்யவில்லை. கட்டாயப்படுத்தி கையொப்பம் பெற்று இருக்கிறார்கள் என்று அயம் எழுந்து உள்ளது. துணை குடியரசு தலைவர் பதவி விலகல் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு விசாரனை நடத்த வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து எடப்பாடிப் ழனிச்சாமி பல விமர்சனங்களை வைக்கிறார். அதை வரவேற்கிறோம். ஆனால் பாஜகவின் வழிகாட்டுதலின் படி இது போன்ற விமர்சனங்களை வைக்கிறாரோ என்ற அயம் எழுந்து உள்ளது. பாஜகவை தான் கொள்கை பகையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி முன் நிறுத்துகிறது. அதிமுகவை அவ்வாறு முன் நிறுத்தவில்லை. பாஜகவால் பாதிக்கப்பட்ட கூட்டணி கட்சிகள் பல என்ற சான்றுகளை காட்ட முடியும். கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தி முதுகில் சவாரி செய்து அந்தந்த மாநிலங்களில் காலுன்றி வருகிறது.

அதே உக்தியை தமிழ்நாட்டில் பாஜக கையாளுகிறது. அதிமுகவை பயன்படுத்தி வளர துடிக்கிறது. அதிமுகவை பலவீனப்படுத்த துடிக்கிறார்கள். திமுகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை விட அதிமுகவை பலவீனப்படுத்தி தமிழ்நாட்டில் 2வது பெரிய கட்சி என்ற பதைப்பு தான் பாஜகவிற்கு மேலோங்கி உள்ளது. இதை தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டி காட்டுகிறது. அதிமுகவுடன் தோழமை உணர்வு இருக்கிறது. அதிமுக பாழ்பட்டு சிதைந்து விடக் கூடாது என்ற பொறுப்புணர்வுடன் தான் சுட்டி காட்டுகிறோமே தவிர அதிமுக மீதோ எடப்பாடி பழனிச்சாமி மீதோ எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.

திமுக கூட்டணியில் இருப்பதால் தான் அதிமுக, பாஜகவை விமர்சிக்கிறோம் என்று கூறுகிறோம். திமுக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜகவின் கொள்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்காது. தொடர்ந்து விமர்சிப்போம். அதிமுக-பாஜக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை. அதிமுக ஒரு திராவிடர் இயக்கம். எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களை முன் நிறுத்தி இயங்கு கிற இயக்கம். நட்புணர்வுடன் பேசுகிறோம். தேவையில்லை என்றால் பேச போவதில்லை. அண்ணாமலை தலைவர் பதவியில் இல்லை என்பதை மறந்து பேசிக்கொண்டு இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
#BJP ALLIANCEAIADMKAnnamalaiChennaiDMKEPSMKStalinthirumavalavan
Advertisement
Next Article